இந்தியாவின் நவநாகரீக நகைகளுக்கான முன் னணி பிராண்ட்களில் ஒன்றான தனிஷ்க்கின் மியா, கோவையில் புதிய விற்பனை நிலையத்தை தொடங்கியிருக்கிறது.
டைட்டன் கம்பெனி லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் சி.வி. வெங்கடராமன், விற்பனை நிலையத்தை தொடங்கி வைத்தார். புதிய விற்பனை நிலை யம், ப்ரோஸோன் மால், எம்.ஐ, ஸ்டோருக்கு அருகே. சிவானந்தபுரம், சத்தி சாலை, கோவை என்ற முகவரியில் அமைந்திருக்கிறது.
இங்கு விதவிதமான அட்டகாசமான வடிவமைப்புகளிலான 14 காரட் மற்றும் 18 கார்ட் நவநாகரீக நகைகள் குவிந்துள்ளன. மனதைக் கவரும் வண்ணங்களிலான கற்கள் முதல், ஜொலிக்கும் தங்கம், பளபளக்கும் வைரம் மற்றும் வெள்ளி என இந்த விற்பனை நிலையத்தில் அன்றாட பயன்பாட்டுக்கும், விழாக் காலங்களில் அணிவதற்கும் ஏற்ற நகைகள் இங்கு இடம்பெற்றுள்ளன.
இன்றைய பாணியிலான, நேர்த்தியான நகைத்தொகுப்புகளுக்கு பெயர் பெற்ற ப்ராண்டாக திகழும் தனிஷ்க்கின் மியா, ஆர்வத்தையும் உற்சாகத்தையும் தூண்டும் காதணிகள், மோதிரங்கள், பென்டென்ட்கள், நெக் லெஸ்கள், வளையல்கள், பிரேஸ்லெட்கள் என அனைத்து வகையாக நகை களையும் ஆடம்பரமான வேலைப்பாடுகள் இல்லாமல் ஆனால் பார்ப்பதற்கு அசத்தலாக, ஸ்டைலாக இருக்கும் நகைகளாக வழங்குகிறது.
மிக அழகான வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் பல்வேறு நகைகளின் தொகுப்பு, வாடிக்கையாளர்களின் விதவிதமான விருப்பத்தேர்வுகளுக்கு ஏற்றதாகவும், அவர்களது ஸ்டைலை அழகுறச் செய்வதாகவும் அமைந்தி ருக்கின்றன.
சில்லறை விற்பனை
டைட்டன் கம்பெனி லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் சி.வி. வெங்கடராமன் கூறியதா வது: கோவையில் சில்லறை விற்பனை செயல்பாடுகளை விரிவுப்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தி இருக்கும் இரண்டாவது
பிரத்யேக விற்பனை நிலையம், சில்லறை வர்த்தகத்தில் மற்றுமொரு மைல்கல்லாக அமைந்திருக்கிறது.
ஒவ்வொரு பெண்ணின் தேவைகளையும், எதிர் பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இடம் பெற்றுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு இதுவரையில் அனுப வித்திராத, மனதிற்கு நெருக்கமான ஒரு அலாதியான ஷாப்பிங் அனுபவத்தை அளிக்க வேண்டுமென்பதற்காக இந்த விற்பனை நிலையத்தை ஆரம்பித்துள்ளோம்.
தனிஷ்க்கின் மியா தனக்கென்று தனித்துவ மிக்க இடத்தை உரு வாக்கியுள்ளது. இதே அக்கறையையும், அர்ப்பணிப்பையும் தொடர்வோம்’ என்றார்.