fbpx
Homeபிற செய்திகள்மாற்றுத்திறனாளிகளுக்கு நலஉதவிகள்: அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலஉதவிகள்: அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் முகாமினை சமூக நலன் மற்றும் மகளிர் உரி மைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் முன்னி லையில் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து நலவாரிய திட்டத்தின் கீழ் விபத்து மரண உதவித்தொகை ஒரு பயனாளிக்கு ரூ.1 லட்சம், இயற்கை மரண உதவித்தொகை 10 பயனா ளிகளுக்கு தலா ரூபாய் 1 7000 வீதம் மொத்தம் ரூ.1.70 லட்சம், 8 பயனாளிகளுக்கு ரூ.54720 மதிப்பில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், 10 பயனாளிகளுக்கும் ரூ.1,35,000- மதிப்பில் திறன் பேசிகள் என மொத்தம் 29 பயனாளிகளுக்கு ரூ.4,59,720- மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெ.கீதா ஜீவன் வழங்கினார்.

முகாமில் மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், சிறப்பு பேச்சு பயிற்சியாளர் ராஜேஸ்வரி, வட்டாட்சியர் ஜான்சன் மற்றும் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமி நாதன், துணை ஒருங்கிணைப்பாளர் நாகராஜன், தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, மாவட்ட மருத் துவர் அணி தலைவர் அருண்குமார், துணை தலைவர் ஜுடி ஜீவன்குமார், மாநகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், கவுன்சிலர்கள் சரவணக் குமார், முத்துமாரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img