கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மூலதள மானிய நிதி உதவித்திட்டத்தின் கீழ் தார் சாலை அமைக்கும் பணியினை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
அருகில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, திருப்பூர் மாநகராட்சி மண்டல குழுத்தலைவர் பத்மநாபன், ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி மன்ற தலைவர் அகத்தூர் சாமி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங் மற்றும் பலர் உடனிருந்தனர்.