தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த 11 குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் தங்க மோதிரங்கள் அணிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆர் எம்ஓ சைலஸ்ஜெபமணி, மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி, மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப் மாநகரத் துணைச் செயலாளர் கனகராஜ், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, மாநகர இளைஞரணி துணைத் தலைவர் ரவி, பகுதி செயலாளர் ராம கிருஷ்ணன், கவுன்சிலர்கள் இசக்கிராஜா, சரவணக் குமார், கந்தசாமி, விஜய குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



