fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, 2வது சிறந்த வங்கியாக தேர்வாகி விருது பெற்று அசத்தல்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, 2வது சிறந்த வங்கியாக தேர்வாகி விருது பெற்று அசத்தல்

தூத்துக்குடியை தலை¬ மயிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 2வது சிறந்த வங்கியாக சிறிய வங்கி பிரிவில் தேர்வு பெற்று விருது பெற்றுள்ளது.

கோவாவில் நடைபெற்ற வளர்ந்து வரும் ஆசிய வங்கி விருதுகள் 2022-&23 விழாவில் இந்த விருதினை வங்கியின் பொது மேலாளர் (செயல்பாடுகள் மற்றும் சேவைகள் துறை) சூரியராஜிடம் மிசிசி ஏற்றுமதி கமிட்டி – ஙிதிஷிமி, அட்லானு சென் வழங்கினார்.

மேலும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி யானது இடர்மேலாண்மை, லாபம் ஈட்டுதல், கடன் வழங்கியதன் தரம் ஆகியவற்றில் சிறிய வங்கி பிரிவில் விருதுகளை பெற்றுள்ளது.

இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ், கொல்கத்தா, வங்கிகளின் திறமையான செயல் பாடுகளின் அடிப்படையில் தலைசிறந்த நடுவர்களைக் கொண்டு தேர்ந்தெடுத்து இந்த விருதுகளை வழங்கி வருகிறது.

இந்த விருது பற்றி வங்கியின் நிர்வாக இயக்குனர் எஸ்.கிருஷ்ணன் கூறுகையில் “விருது பெற்ற மகிழ்ச்சியினை வங்கியின் அனைத்து உடமைதாரர்களுக்கும் பகிர்வதாகவும், விருதுகள் எங்களது வங்கியின் அனைவரையும் இன்னும் சிறப்பாக செயல்பட்டு மேலும் வளர்ச்சியடையவும் ஊக்கமளிக்கிறது” என தெரிவித்தார்

தமிழ்நாடு மெர்க்கன் டைல் வங்கி வங்கியானது ஒரு பெயர்பெற்ற பழைய தனியார் துறை வங்கியாகும். தூத்துக்குடியில் தலைமை அலுவலகம் கொண்ட இந்த வங்கி நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவையிலும் அதன் கோட்பாடுகள் மற்றும் வரைமுறைகளிலும் போற்று தலுக்குரிய சரித்திரம் படைத்து வருவதோடு, தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது.

இந்த வங்கியானது, இந்தியா முழுவதிலும் 17 மாநிலங்கள், நான்கு யூனியன் பிரதேசங்களில் 536 கிளைகள், 12 மண்டல அலுவகங்களின் மூலம் சுமார் ஐம்பது லட்சத்திற்கு மேலான வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவை ஆற்றி வருகிறது.

படிக்க வேண்டும்

spot_img