fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையத்தில் சாலையை சரி செய்து தரக்கோரி பொதுமக்கள் மறியல்

மேட்டுப்பாளையத்தில் சாலையை சரி செய்து தரக்கோரி பொதுமக்கள் மறியல்

மேட்டுப்பாளையம் நகராட்சியில் மொத்தமாக 33 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீரானது பவானி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நகரின் மையப் பகுதியான மேட்டுப் பாளையம் பத்ரகாளியம்மன் கோயில் செல்லும் வழியில் உள்ள எஸ் எம் நகர் பகுதியில் கடந்த ஒரு மாதம் காலமாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு அதை சரி செய்வதற்காக நக ராட்சி நிர்வாகம் சார்பில் குழி தோண்டப்பட்டு அதனை மூடாமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப் படுகிறது.

இது குறித்து பகுதி பொதுமக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பத்ரகாளியம்மன் கோயில் செல்லும் பிரதான சாலை யில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் பள்ளி குழந்தைகள் செல்வதற்கு உரிய பாதை இல்லை என்றும் இவ்வழியை தான் வனபத்ரகாளியம்மன் கோயில், நந்தவனம், மின் மயானம் உள்ளிட்டவற்றுக்கு செல்வதற்காக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் கூறி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களையும் எழுப்பினர்.

இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வநாயகம், நகராட்சி இளநிலை பொறியாளர் மனோகரன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட் டுக் கொண்டிருந்த பொது மக்களிடம் பேச்சுவார்த் தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையில் உடன டியாக பொதுமக்களுக்கான நடைபாதை அமைக்கப்படும் 20 நாட்களுக்குள் தார் சாலை முழுவதுமாக அமைக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இது குறித்து நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் கூறுகையில் தார் சாலை அமைக்கும் பணி நாளை முதல் துவங்கப்படும் என்றும் பொதுமக்களுக்கான நடை பாதை உடனடியாக போர்க்கால அடிப்படையில் அமைக்கப்படும் என்று கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img