தமிழ்நாடு அரசின் சமூக பாதுகாப்புத்துறை, தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் பராமரிக்கப்படும் இல்லங்களில் தங்கி பயின்று பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில் கேடயம் மற்றும் சான்றிதழ்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கி உரையாற்றினார். அருகில் உதவி ஆட்சியர் கௌரவ் குமார், மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் ரூபன் கிஷோர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ், மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் ரதி தேவி ஆகியோர் உள்ளனர்.



