தூத்துக்குடி தெற்கு மாவட்ட புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வுக்கூட்டம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ வழிகாட்டுதலின் படி தூத்துக்குடி ஆல்வின் ஓட்டலில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் குட்டி பாண்டியன் தலைமை தாங்கினார்.
மாநில இளைஞரணி செயலாளர் ஆனந்து, மாவட்ட துணைசெயலாளர் ராயன் சி.சார்லஸ் மாவட்ட செய்தி தொடர்பாளர் செந்தில், மாவட்ட துணை தலைவர் மதுரைவீரன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் தெய்வமுருகன் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்
சிறப்பு விருந்தினராக மாநில முதன்மை செயலாளர் ரூசேந்திர குமார், மாநில செயலாளர் பரணி மாரி, மாநில வழக்கறிஞர் அணி ஜான்சன் ஆம்ஸ்ட்ராங் பங்கேற்று கட்சியின் வளர்ச்சி குறித்தும், வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் உறுப்பினர்களை அதிக அளவு சேர்த்தல் குறித்தும் கலந்தா லோசித்தனர்.
கூட்டத்தில் கீழ்கண்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. வேங்கை வயல் குடிநீரில் மலத்தை கலக்கிய குற்றவாளிகளை கைது செய்யாத தமிழக அரசை தூத்துக்குடி மாவட்ட புரட்சி பாரதம் கட்சி வன்மையாக கன்டிக்கிறது.
புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் பூவை மூர்த்திக்கு முழு உருவ வெண்கலச் சிலையுடன் சென்னையில் மணிமண்டபத்தை தமிழக அரசு அமைத்துதர வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களை உடனடியாக மீட்டு தர வேண்டும், கொடி கம்பங்கள் எல்லா கிராமங்களில் அமைக்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக தென்பாகம் காவல் நிலையம் அருகி லுள்ள அம்பேத்கார் சிலைக்கு மாநில முதன்மை செயலாளர் ரூசேந்திர குமார், மாநில செயலாளர் பரணி மாரி மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நிகழ்வில் முக்கிய நிர்வாகிகள் தர்மன் குட்டி,. எட்மன் ஏகாம்பரம், பெரமையன், ரமேஷ், மாவட்ட நிர்வாகிகள் மகேஷ், முத்துவேல், சதீஷ் ஜெயக்குமார், பெருமாள் வெற்றிவேல், சரவணன் ராஜ் ராஜன், சுதாகர், ராஜ், . பிரபாகரன், ஆகாஷ் பாண்டியன், கோபால், ராஜன் .ஆனந்த், மைக்கேல், அஜித், செல்வம், சுப்பிரமணியன் மற்றும் புரட்சி பாரதம் நகர, ஒன்றிய, வட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.