fbpx
Homeபிற செய்திகள்ஊட்டி கிரசன்ட் பள்ளி வெள்ளிவிழா

ஊட்டி கிரசன்ட் பள்ளி வெள்ளிவிழா

ஊட்டி கிரசன்ட் பள்ளியின் வெள்ளிவிழா ஆண்டு நிகழ்ச்சி பழங்குடி பண்பாட்டு மையத்தில் நடந்தது. பள்ளி தாளாளர் உமர்பரூக் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற தமிழ்நாடு கவர்னரின் முதன்மை செயலர் ஆனந்த் ராவ் விஷ்ணு பட்டேல், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கே.வி. விஸ்வநாத் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், ஆனந்தராவ் விஷ்ணு பட்டேல் பேசியதாவது: நீலகிரி சுற்றுலா மையம் மட்டுமல்ல சிறந்த உயிர் சூழல் காப்பகமாக உள்ளது. இங்குள்ள வனம் மற்றும் வனம் சார்ந்த உயிரினங்கள் மிகவும் அரியதாகும்.

அவற்றை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. குறிப்பாக, வரும் கால சந்ததியினரான மாணவர்கள், குழந்தைகள், இந்த மாவட்டத்தின் பாதுகாப்பில் முக்கிய பங்களிப்பு அளிக்க வேண்டும்.

வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை விட, நம் மாவட்டத்தில் உள்ள வன உயிரின காப்பகத்துக்கு சென்று, அதனை அறிந்து கொள்வது ஒவ்வொரு மாணவர்களின் கடமை.

நம் மாவட்டத்தின் தொன்மை குறித்தும் பெற்றோர் தங்களின் குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும். இந்த மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிக்காமல் இருக்க அனைவரும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

படிக்க வேண்டும்

spot_img