fbpx
Homeபிற செய்திகள்தொடக்க பள்ளி ஆண்டு விழாவில் சண்முகையா எம்.எல்.ஏ, பங்கேற்பு

தொடக்க பள்ளி ஆண்டு விழாவில் சண்முகையா எம்.எல்.ஏ, பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பண்டாரம் பட்டி தூ.ந. தி.அ.க. தொடக்க பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் ஜெயக்குமார் ஜாலி தலைமை தாங்கினார், பள்ளியின் தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் வரவேற்புரை வழங்கினார்.

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் முதல்வர் டாக் டர் கோல்டா கிரேனா ராஜாத்தி, தூத்துக்குடி வட்டார கல்வி அலுவ லர்கள் ஜெயபாலன் துரைராஜ் தேவசீர், எம்.தேவி, சேசுராஜன் செல்வகுமார், ஒருங்கி ணைந்த பள்ளிக்கல்வி மேற் பார்வையாளர் சார்லஸ், ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணவேணி, சுடலை முத்து மற்றும் ஆசிரியர் பயிற்சிநர் ஜெயா முன் னிலை வகித்தனர், விழாவில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசு களையும் ஆசிரியர்களுக்கு பாராட்டுகளையும் வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளர்க ளாக மாமன்ற உறுப்பினர் காந்திமணி, திமுக பகுதி செயலாளர் சிவக்குமார், சாமுவேல் பாலிடெக்னிக் முதல்வர் மோசஸ் விரிவுரையாளர் முகமது ரபிக், மற்றும் விக்டர் தேவசகாயம்,
பாக்கியசெல்வன், ஐசக் ஜெயக்குமார், பொன்ராஜ், கனிஷ்டன், ராஜேஷ் குமார், ஊர் தலைவர்கள் பிரதீப் குருநாதன் பிரவீன் மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img