கோவையில் குடிநீர், சாலை உள்ளிட்டவை யினை நகராட்சிகள் மற் றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் முதன்மைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா திடீர் ஆய்வு மேற் கொண்டார்.
தமிழக நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் முதன்மைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா வளர்ச்சி திட்டங்கள் மற்றும் குடிநீர் இணைப் புகள் தொடர்பாக கோவையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
இதன் ஒரு பகுதியாக சங்கனூர், நாராயணசாமி லே அவுட் பகுதியில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வரும் புகார் மீது எடுக்கபட்ட நடவடிக்கை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
குறைகள்
இதில் வீடுகளில் இருக்கும் பைப்புகள், குடிநீர், குப்பைகள் தரம் பிரிக்கும் இடம், மாநகராட்சி மயானம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு மேற் கொண்டு பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இதில் திடீரென ஒரு வீட்டில் புகுந்த செயலர் ஷிவ்தாஸ் மீனா நீர் தேக்க தொட்டியினை ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் டப்பாவில் தண்ணீரை எடுத்து அருந்தினார். தொடர்ந்து பில்லூர் குடிநீரை ஆய்வு செய்த அவரை அப்பகுதி மக்கள் சூழ்ந்து நின்று தங்களது குறைகளை தெரிவித்தனர்.
இதில் மூன்று மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிகழ்ந்து வருவதாகவும், கால்வாய் தூர்வாராததால் கழிவு நீர் தேங்கி நிற்பதாகவும், துர்நாற்றம் வீசுவ தாகவும், சாலை வசதிகளை முறை யாக ஏற்படுத்தி தர வேண்டும் மக்கள் என கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து அவர்களது குறைகள்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு உறுதியளித்த செயலர் அரசு அதிகாரிகளுக்கு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.



