தூத்துக்குடி மாவட்ட திட்டக் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் திட்டக் குழு உறுப்பினர்கள் நகரப்பகுதிக்கு 5 உறுப்பினர்களும் ஊரக பகுதிக்கு 7 உறுப்பினர்களுமாக மொத்தம் 12 உறுப்பினர்கள் தேர்வு செய்ய தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்தது. அதன்படி வேட்பு மனுதாக்கல் நடந்தது.
இதில் ஊரகப்பகுதிக்கு மாவட்ட பஞ்சாயத்து 9-வது வார்டு உறுப்பினர் ரா.அருண்குமார், 10-வது வார்டு செல்வக்குமார், 1-வது வார்டு உறுப்பினர் கு.ஞான குருசாமி, 4-வது வார்டு த.தங்க மாரியம்மாள், 11-வது வார்டு ந.பாலசரசுவதி, 2-வது வார்டு யு.மிக்கேல் நவமணி, 16-வது வார்டு ஜெ.ஜெசிபொன்ராணி ஆகிய 7 பேர் மட்டும் மனு தாக்கல் செய்தனர். இதனால் 7 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ள னர்.
நகர்ப்புற பகுதிக்கு 5 உறுப்பினர் பதவிக்கு கயத் தார் பேரூராட்சி 3-வது வார்டு கோ.அய்யாத்துரை, கோவில்பட்டி நகராட்சி 21-வது வார்டு தா.உலகராணி, தூத்துக்குடி மாநகராட்சி 32-வது வார்டு அ.கந்தசாமி, திருச்செந்தூர் நகராட்சி 1-வது வார்டு ஆ.பூ.ரமேஷ், விளாத்திகுளம் பேரூராட்சி 8-வது வார்டு மு.ராமலட்சுமி, சாத்தான்குளம் பேரூராட்சி 4-வது வார்டு செ.ஜோசப் ஆகிய 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் 5 உறுப்பினர்களை தேர்வு செய் வதற்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.
இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முத்துஅரங்கில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. மாநகராட்சி உறுப்பினர்கள் மேயர் ஜெகன் பெரியசாமியுடன் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் வருகைதந்து வாக்களித்தனர்.
தொடர்ந்து கழுகுமலை பேரூராட்சி தலைவர் அருணாசுப்பிரமணியன் துணை தலைவர் சுப்பிரமணியன் உடன் பேரூராட்சி உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
விளாத்திகுளம், எட்டையபுரம், புதூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் கோவில்பட்டி நகராட்சி வார்டு உறுப்பினர்களும் வாக்களித்தனர்.