fbpx
Homeபிற செய்திகள்கோவையில் ஆசியா நகைக் கண்காட்சி

கோவையில் ஆசியா நகைக் கண்காட்சி

தென்னிந்திய அளவில் கவர்ச்சிரமான, முக்கிய நகை கண்காட்சி மற்றும் விற்பனை கண்காட்சியின் 47-வது பதிப்பு, கோவை, ரேஸ்கோர்ஸ் தாஜ் விவாந்தா ஹோட்டலில் துவங்கியது.

வரும் 25-ம் தேதி வரை இந்த காண் காட்சி காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. கண்காட்சியை சிறந்த நகை, ஆடை வடிவமைப் பாளர் அபர்ணா சுங்கு, மகளிர் தொழில்முனை வோருக்கான சிறந்த விருதினை பெற்றவரும் கபேடாட்டரம் பிரை வேட் லிமிடெட் நிறுவ னத்தின் நிர்வாக இயக் குனருமான ரஞ்சனா சிங்கால் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

ஆசியா நகைக் கண்காட்சியில், நவீன தற்போதை கலெக்சன் களாக, தங்கம், வைரம், பிளாட்டினம், திருமண நகைகளும் இடம் பெற்றுள் ளன.
பாரம்பரிய அரிய வகை கற்கள், குந்தன், ஜடாவு, பொல்கி நகை களும், வெள்ளியில் செய்த நகைகளும் இடம் பெற்றுள்ளன.

நகரில் நடக்கும் மிக நுட்பமான கண் காட்சியில் ஒன்றாக இது இருக்கும். இந்த கண் காட்சியில் நகைகளை நேரடியாக வாங்கலாம் அல்லது முன்பதிவு செய்து கொள்ளலாம்.

பெங்களூரு கஜராஜ் ஜூவல்லர்ஸ், நவரத்தன் ஜூவல்லர்ஸ், கீயா ஜூவல் லர்ஸ், கல் ஜூவல்லர்ஸ், டில்லி. நேகா கிரியேஷன்ஸ், மும்பை. ரேணுகா பைன் ஜூவல்லர்ஸ் மும்பை. ஸ்ரீகந்தவேல் ஜூவல் லர்ஸ், கோவை ஸ்ரீயன்ஸ் ஜூவல்ஸ், டில்லி. ஜிவா ஜூவல்லரி, மும்பை. அகோயா ஜூவல்ஸ் (ஹைதராபாத்), யுப் ஜூவல்லரி, மும்பை. ஜூவர் வால்சன் (மும்பை), நாபில்லா ஜூவல்லர்ஸ் கோயம்புத்தூர், டயமாரன் ஜூவல்லரி, மும்பை. சுனில் ஜூவல்லர்ஸ், ஜெய்ப்பூர், எப்இசட் ஜெம்ஸ், ஜெய்ப்பூர். விஜே ஜூவல்லரி விசன் உட்பட மற்றும் பல நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

படிக்க வேண்டும்

spot_img