திராவிட முன்னேற்றக் கழக அரசின் திட்டங்களையும் சாதனைகளையும் மக்களிடம் எடுத்துரைத்து, 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை மேற்கொள்ளும் விதமாக ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பிரசார இயக்கத்தை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த இயக்கம் 45 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட் பட்ட போல்பேட்டை பகுதியில் “ஓரணியில் தமிழ்நாடு” இயக்கத்தை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்து, வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் குறித்து எடுத்துரைத்து, திமுகவில் இணையுமாறு அழைப்பு விடுத்தனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.



