Homeபிற செய்திகள்ரூ.1.14 கோடியில் தார் சாலை பணியை துவக்கி வைத்த மார்கண்டேயன் எம்எல்ஏ

ரூ.1.14 கோடியில் தார் சாலை பணியை துவக்கி வைத்த மார்கண்டேயன் எம்எல்ஏ

எட்டையாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.1.14-கோடி மதிப்பீட்டில் தார் சாலை மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்தார். மேலும் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

நிகழ்வில் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், பேரூர் கழக செயலாளர் பாரதி கணேசன், பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் சௌந்தரராஜன், முன்னாள் மில் சேர்மன் ஆழ்வார் உதயகுமார், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முனியசாமி, பேரூர் கழக அவைத்தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி கல்லடிவீரன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கதிர்வேல், மாதவன், மணிகண்டன், பேரூர் கழகத் துணைச் செயலாளர்கள் மாரியப்பன், முத்து முனியசாமி, கவுன்சிலர்கள் குமார், ராமர், ஜெயலட்சுமி, அய்யம்மாள் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img