fbpx
Homeபிற செய்திகள்இந்தியன் ஆயில் நிறுவனம் ஆசிய ரோடு ரேசிங் சாம்பியன் ஷிப்பி-ன் பார்ட்னராக இணைந்தது

இந்தியன் ஆயில் நிறுவனம் ஆசிய ரோடு ரேசிங் சாம்பியன் ஷிப்பி-ன் பார்ட்னராக இணைந்தது

2024 முதல் 2026 வரை நடைபெறும் ஆசிய ரோடு ரேசிங் சாம்பியன் ஷிப்பி-ன் அஃபீஸியல் ஃபீயூல் பார்ட்னராக இந்தியன் ஆயில் நிறுவனம் இணைந்துள்ளது.

ஸ்ட்ராம் அல்டிமேட் ரேஸிங் ஃபீல் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ‘ஸ்ட்ராம்“ எரி பொருளானது, ஆசிய ரோடு ரேசிங் சாம்பியன்ஷிப்பின் எல்லா போட்டிகளிலும் இணைந்திருக்கும். குஜராத் ரிபைனரியில் இந்த எரிபொருள் நவீன தொழில்நுட்பத்துடன் உற்பத்தி செய்யப்படுகிறது.

சர்வதேச அளவில் புகழ் பெறும் இந்த எரிபொருள் ‘மேக் இன் இந்தியா’ முனைப்புக்கு பெருமை சேர்ப்பதாகும். இது சுவிட்சர்லாந்தின், எப். ஐ. எம் அங்கீகாரம் பெற்ற இன்டர்டெக் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். கடுமையான சர்வதேச தர நிர்ணய அளவுகோல்களில் தேர்வானதாகும்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் மகாதேவ் வைத்யா இது குறித்து பேசும்போது:
ஆசிய அளவிலான ‘ஏ ஆர் ஆர் சி’ மோட்டார் ஸ்போர்ட்ஸ் உடன் எங்களது அதி நவீன எரிபொருள் ‘ஸ்ட்ராம்‘ இணைந்திருப்பது எங்களது அசுர வளர்ச்சி முன்னேற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

தாய்லாந்தில் மார்ச் 15 முதல் 17 வரை நடக்கும் முதல் பந்தயத்துக்கு ‘ஸ்ட்ராம்‘ எரிபொருளை கடந்த பிப்ரவரி 23ம் தேதி மும்பை துறைமுகத்திலிருந்து இந்தியன் ஆயில் நிறுவனம் கப்பலேற்றியது. கடந்தாண்டு மோட்டோ ஜி பி பாரத் பந்தயத்திலும் இணைந்திருந்தது.

பிரீமியம் எரிபொருள் மற்றும் லுப்ரிகன்ட் விற்பனையில் பல்வேறு நாடுகளில் சந்தையில் முன்னணி வைக்கிறது. இதனாலேயே மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்வுகளில் நம்பத் தகுந்த பங்குதாரராகத் திகழ்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img