தூத்துக்குடி மாநகராட்சியில் முதற்கட்டாமாக 10 வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மாமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் அணி நிர்வாகிகளின் கருத்துக்கேட்பு கலந்துரையாடல் சிறப்பு கூட்டம் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
இதில் கழக நிர்வாகிகளிடம் தங்கள் பகுதியிலுள்ள மக்கள் மற்றும் பொதுவான பிரச்னைகளை கேட்டு அறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இந்த நிகழ்வில் பகுதி கழக செயலாளர்கள், மண்டல தலைவர்கள், வட்ட கழக செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் அணி சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.