கடந்த காலத்தில் வாழ்ந்த தலைவர்களின் வரலாறுகளை எதிர்காலத் தலை முறையினர் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கீதா ஜீவன் பேசினார்.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக கலை இலக்கிய, பகுத்தறிவு பேரவை சார் பில் கவிதைகள், திரைப்பட வசனங்கள் ஒப்புவித்தல் போட்டி போல்பேட்டை கீதா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்றது.
மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் சரத் பாலா தலைமை வகித்தார். துணை அமைப்பாளர் சோமநாதன் அற்புதராஜ் மற்றும் பலர் முன்னிலை வைத்தனர். மாநகர அமைப்பாளர் மரிய ஜோன் பிரான்சிஸ் வரவேற்றார்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கீதா ஜீவன் போட்டியை துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: `புரட்சிகரமான வரலாறு களை எதிர்கால தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும்.
இதற்காகத்தான் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் கவிதைகள், திரைப்பட வசனங்கள் ஒப்புவித்தல் போட்டியை மாவட்டந் தோறும் நடத்த உத்தரவிட்டார்.
கடந்த காலத்தில் வாழ்ந்த தலைவர்களின் வரலாறுகளை எதிர்காலத் தலை முறையினர் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் என் பதற்காகத்தான் இது போன்ற போட்டிகளை திமுக நடத்துகிறது. இவ் வாறு அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லை செல்வம் மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார் மீனவர் அணி மாநில துணை செயலாளர் துறைமுகம் ப்ளோரன்ஸ் மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசாமி மாவட்டத் துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின் ஆறுமுகம் மாநகரத் துணைச் செயலாளர் கவுன்சிலர் கீதா முருகேசன் மீனவர் அணி மாவட்ட அணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின் வக்கீல் அசோக் மாநகர கலை இலக்கிய அணி செயலாளர் ஜீவன் ஜேக்கப் மருத்துவ அணி தலைவர் அருண்குமார் நிர்வாகிகள் பாஸ்கர் கருணாநிதி மற்றும் பலர் கலந்து கொண்டனர் மாவட்டத் தலைவர் இருதயராஜ் நன்றி கூறினார்.



