தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கணேஷ் நகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (20ம் தேதி) நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்செல்வன் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி நகர் நல அலுவலர் சுமதி முன்னிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், ரத்த அழுத்தம் சரி பார்க் கும் கருவி மற்றும் சர்க்கரை அளவு சரி பார்க்கும் கருவி, எடை பார்க்கும் கருவி, மற்றும் நாற்காலிகள், போர்வைகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
நிகழ்வின் போது மருத்துவ அலுவலர் ஆர்த்தி, திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், வடக்கு மாவட்ட மருத்துவர் அணி தலைவர் முனைவர் அருண்குமார், துணைத் தலைவர் ஜுடி, துணை அமைப்பாளர் மருத்துவர் மகிழ் ஜான், மாநகர அமைப்பாளர் இம்மானுவேல், துணை அமைப்பாளர்கள் ஜெய காந்தன், மாரிமுத்து, பகுதி செயலாளர் ராம கிருஷ்ணன் எம்.சி, மாமன்ற உறுப்பினர் வைதேகி, பொன்னப்பன், சரவணன் ,மதிமுக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வீ.சரவண பெருமாள் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் மாமன்ற உறுப்பினர்கள் வட்டச் செயலாளர்கள் வட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.