அட்ஹெசிவ் தொழில் துறையில் நுழைவது பற்றியும், டைல்ஸ் தயாரிப்பு வகைகளின் விரிவாக்கத்தைப் பற்றியும் பாத்வேர் மற்றும் டைல்ஸ் பிராண்டான ஹிந்த்வேர் லிமிடெட் சமீபத்தில் அறிவித்தது.
செராமிக்கில் இருந்து எலிவேஷன் டைல்கள் வரையிலான முழு டைல் வகைகளுக்கும் தேவையான 5 வெவ்வேறு எஸ்கேயு-களை இந்த பிராண்ட் அறி முகப்படுத்தியுள்ளது.
இந்த உத்திசார்ந்த நகர்வின் மூலம், வாடிக்கையாளர்களின் கட்டுமானம் மற்றும் வீட்டு மேம்பாடுகளின் தேவை களுக்கு ஒரே கூரையின் கீழ் ஒரு விரிவான தீர்வை வழங்குவதை இந்த பிராண்ட் இலக்காகக் கொண்டுள்ளது.
கட்டுமானத் துறையில் நம்பகமான அட்ஹெசிவ் தீர்வுகளின் தேவை அதிக ரித்து வருவதால், டைல் அட்ஹெசிவ் மார்க்கெட் கணிசமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹிந்த்வேர் பாத் அண்ட் டைல்ஸின் தலைமைச் செயல் அதிகாரி சுதான்ஷு போக்ரியால் கூறியதாவது: டைல்களில் தங்க ளுக்கு இருக்கும் மையப் போட்டிக்கும் அவற்றை சிறந்த முறையில் நிறுவ இன்றியமையாத அட்ஹெ சிவ் தயாரிப்புகளின் கூடுதல் பொருள் என்ற தன்மைக்கும் இடையில் இருக்கும் இணைதிறத்தை ஹிந்த்வேர் அறிந்துள்ளது.
இந்த உத்திசார்ந்த ஒருங் கிணைப்பு ஒரு விரிவான தீர்வை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களின் வசதியை மேம்படுத்துவ தோடு மட்டுமல்லாமல் எங்களை அவர்களின் அனைத்து டைலிங் தேவை களையும் நிவர்த்தி செய்யும் ஒரே இடம் என்ற நிலைக்குக் கொண்டுவருகிறது என்றார்.
அட்ஹெசிவ்கள் மற்றும் கிரௌட்களின் இந்தப் பிரத்யேகமான வகைகள் சேல்ஸ் ஹிந்த்வேர் டைல்ஸின் துணைத்தலைவர் பங்கஜ் மெதிரத்தா, புதுதில்லியில் நடைபெற்ற தேசிய விற்பனையாளர்கள் கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார்.
இந்தியா முழுவதும் இருந்து 200-க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.