சர்வதேச அளவிலான சமையல் கலைப் போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் உணவு அறிவியல் மற்றும் விடுதி மேலாண்மைத்துறை வெண் கலப் பதக்கம் வென்றது.
தென்னிந்திய சமையல் கலைஞர்கள் சங்கம் சார்பில், 6-வது சர்வதேச அளவிலான சமையல் கலைப்போட்டி, சென்னையில் நடைபெற்றது.
இதில் இந்தியா, இலங்கை, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட பல் வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
நடுவர்களாக சமையல் கலை நிபுணர்கள் இந்தியா, மியான்மர், இலங்கை, வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து வர வழைக்கப்பட்டிருந்தனர்.
போட்டியில் கலந்து கொண்ட கோவை ஸ்ரீ ராம கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உணவு அறிவியல் மற்றும் விடுதி மேலாண்மைத் துறை மாண வர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றனர்.
மாணவர் எம்.கிரிதரன் காய்கறிகள் வடிவமைப்புப் போட்டியில், வெண்கலப் பதக் கம் வென்றார். திருமண கேக் வடிவமைத்தல், கேக் அலங்காரப் போட் டிகளில் மாணவி டி.எப். சமீமா, ஆர்டிஸ்டிக் பிரட் டிஸ்பிளே போட்டியில் மாணவர் எஸ்.பாபு, கே.விமல்குமார் ஆகி யோருக்கு மெரிட் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இது தவிர நேரடி சமையல் போட்டி, குக்கிங் பிளேட்டேட் டெசர்ட் உள்ளிட்ட போட்டிக ளின் இத்துறை மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு ஜெர்மனியைச் சேர்ந்த உலகச் சமையல் கலை நிபுணர்கள் சங்கத் தலைவர் தாமஸ் குல்கர், தென்னிந்திய சமையல் கலை நிபுணர்கள் சங்கத் தலைவர் டாக்டர் தாமோதரன் ஆகியோர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.
பதக்கம் மற்றும் பரிசுகள் பெற்ற உணவு அறிவியல் மற்றும் விடுதி மேலாண்மைத்துறை மாணவர்களை, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி பாராட்டி, வாழ்த்தினார்.