அரசின் திட்டங்களுக்கு முன்னோடியாக கத்தோலிக்க திருச்சபைகள் விளங்குகின்றன” என சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
தூத்துக்குடி மறைமாவட்டத் தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மறை மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து, தூத்துக்குடி சின்னக்கோயில் வளாகத்தில் நுற்றாண்டு நிறைவு விழா சமய, சமூக, அரசியல் நல்லிணக்க விழாவாக நடைபெற்றது. விழா ஒருங்கிணைப்பாளர் அருள் தந்தை ஜேம்ஸ் விக்டர் முன்னுரையாற்றினார்.
தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி வரவேற்றார்.
விழாவுக்கு தலைமை வகித்து, சட்டப்பேரவைத் தலை வர் மு.அப்பாவு பேசியதாவது: முதன்முதலில் புன்னக்காய லில் அச்சு இயந்திரத்தை நிறுவிய வர் அன்ட்ரிக் அடிகளார்.
இந்த மறைமாவட்டம் தொடங்கிய பின்னர், வடக்கன் குளத் தில் பணியாற்றிய முதல் குருவானவ ராகவும், உதவி தலைமை ஆசிரியராகவும் இருந்தவர் தனிநாயகம். இவர் கடந்த1948 இல் தமிழ் இலக்கிய கழகத்தை உருவாக்கினார். முதல் உலகத் தமிழ் மாநாட்டை மலேசியாவில் நடத்தினார்.
இரண்டாவது மாநாட்டை சென்னையில் முன் னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதியை அழைத்து நடத்தினார். இவ்வாறு அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது.
கல்வி, மருத்துவம், சமூக மேம்பாட்டுப் பணிகளில் மறை மாவட்ட ஆயர்கள், அருள் தந்தையர்கள், அருள்சகோதரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின் றனர். அனைவருக்கும் கல்வி, ஏழைகளுக்கு நல உதவிகள், பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட அரசின் திட்டங் களுக்கு முன்னோடியாக கத்தோலிக்க திருச்சபைகள் விளங்குகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
மக்களவை உறுப்பினர் கனிமொழி பேசும்போது, தமிழ கத்தில் 18 ஜாதி பெண்கள் மேலாடை அணிய மறுப்பு தெரிவிக்கப்பட்ட நேரத்தில், அவர்களின் போராட்டத்துக்கு உறுதுணையாக இருந்தது, பெண்களும் படிக்க வேண்டும் என்ற உரிமையை உருவாக்கித் தந்தது, உருவாக்கிக்கொண்டிருப்பது கிறிஸ்தவ திருச்சபைகள்தான் என்றார்.
விழாவில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, பாரதியார் வித்யாலய மேல்நிலைப் பள்ளிச் செயலர் ஏ.பி.சி.வீ.சண்முகம், அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் திருக்கோயில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர், மாவட்ட அரசு காஜி முஜூபூர் ரஹ்மான், தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி நாசரேத் திருமண்டல குருத்துவ காரியதரிசி இம்மானுவேல் வான்ஸ்டக், பொனோ வென்சார் ரோச், ஆம்ஸ்ட்ராங், கான்ஸ்டான்டின் ரவீந்திரன் ஆகியோர் பேசினர்.



