கோவை வெள்ளலூர் பகுதியை சேந்தவர்கள் கதிர்வேல் ராஜ் இசைவாணி தம்பதியர். இவர்களுக்கு ஈ.கே அகல்யா(6) என்ற மகள் உள்ளார். இவர் ஜெயந்திர சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மொத்தம் 4 உலக சாதனை செய்துள்ளார்.
இது குறித்து ஈ.கே அகல்யாவின் பெற்றோர்கள் கதிர்வேல் ராஜ், இசைவாணி ஆகியோர் கூறியதாவது:
‘மகள் அகல்யா இரண்டு வயது இருக்கும் பொழுதே கையில் கிடக்கும் பொருளை வைத்து சுற்றிக்கொண்டே இருப்பாள். ஆகையால் அவளுக்கு முறையான சிலம்பம் பயிற்சி அளிக்க விரும்பினோம். வெள்ளலூரில் உள்ள ஒரு சிலம்ப பயிற்சி பள்ளியில் கடந்த ஏலு மாதங்களாக சிலம்பம் கற்று வருகிறார். பயிற்சியாளர் செந்தில், அகல்யா சிலம்பம் சுற்றும் வேகத்தை கண்டால் கண்டிப்பாக சிலம்பத்தில் பல்வேறு சாதனை புரிவாள் என்று எங்களிடம் கூறினார்.
அவர் கூறுயது போலவே கடந்த ஏப்ரல் 19ம் தேதி இந்தியா வோர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பு சார்பாக இனையதளம் மூலம் நடந்த நிகழ்வில் மகள் அகல்யா 30 வினாடிகளில் 32 சிலம்பம் சுழற்றுதல் முறையை செய்து உலக சாதனை செய்தால். இந்த சாதனையை அடுத்து ஏப்ரல் 23ம் தேதி வோர்ல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பினர் நடத்திய நிகழ்வில் அதே சிலம்பம் சுழற்றுதல் முறையில் 30 வினாடிகளில் 66 முறை சழற்று தனது முந்தின சாதையை மகள் அகல்யா முறியடித்தால்.
இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 28ம் தேதி இன்டர்நேஷனல் பூக் ஆப் ரெக்கார்ட்ஸ் நடத்திய நிகழ்வில் 30 வினாடிகளில் 130 முறை சிலம்பத்தை சுழற்றி தனது 3வது முறையாக உலக சாதனை செய்தால். இந்த மூன்று சாதனைகள் குறித்த செய்தியை அறிந்த ஐன்ஸ்டீன் பூக் ஆப் ரெக்கார்ட்ஸ் துபாய் அமைப்பினர் எங்களை தொடர்பு கொண்டு மகள் அகல்யாவிற்காக ஒரு நிகழ்வை நடத்த விரும்புவதாக கூறினர்.
பின்னர் துபாயில் இருந்து இரண்டு நடுவரக்ள் கோவை வந்து ஐன்ஸ்டீன் பூக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிகழ்வை நடத்தினர். இதில் அகல்யா புது முயற்சியாக கண்ணை கட்டுக் கொண்டு சிலம்பம் சுழற்றி ஒரு நிமிடத்தில் 146 முறை சுழற்றி 4வது முறையாக உலக சாதனை படைத்தால். அகல்யா படைத்த நான்கு உலக சாதனையை லண்டன் வோர்ல்ட் பூக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பினர் அங்கிகரித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.