தூத்துக்குடி வடக்கு மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி, ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், கழக துணை பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் ,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான நி.க்ஷி.மார்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
கூட்டத்தில் தூத்துக்குடி மாநகர மேயரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான ஜெகன் பெரியசாமி, மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் கி.சி ஜெயக்குமார் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய துணை பெருந்தலைவருமான காசிவிஸ்வநாதன் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் ஒன்றிய அவைத்தலைவர் இளையபெருமாள், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன் மாவட்ட பிரதிநிதிகள் சத்தியராஜன், தளவை ராஜா ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வெள்ளைச்சாமி, ராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்துக்குமார், சண்முகையா, முத்துராஜ், சங்கர் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் உட்பட கிளை கழகச் செயலாளர்கள் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.