fbpx
Homeபிற செய்திகள்3 ஆயிரம் பேர் பங்கேற்ற திருப்பூர் மாரத்தான்- 2023:எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மேயர் தொடங்கி வைத்தனர்

3 ஆயிரம் பேர் பங்கேற்ற திருப்பூர் மாரத்தான்- 2023:எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மேயர் தொடங்கி வைத்தனர்

திருப்பூர் வெங்கமேட்டில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி 3 ஆயிரம் பேர் பங்கேற்ற திருப்பூர் மாரத்தான்-2023 நிகழ்ச்சியை எம்.பி.-,எம்.எல்.ஏ.க்கள், மேயர் தொடங்கி வைத்தனர்.

திருப்பூர் வெங்கமேடு ஸ்ரீ பாலாஜி பொது சேவை மையம் மற்றும் அங்கேரிபாளையம், வெங்கமேடு ஊர் பொது மக்கள் சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக திருப்பூர் மாரத் தான் -2023 நேற்று காலை 5.30 மணிக்கு ஜுறம்பா நிகழ்ச்சியு டன் தொடங்கியது.

வி.கே. அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு நடைபெற்ற தொடக்க விழாவில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பாலாஜி வர வேற்றார்.

4 பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாரத்தான் நிகழ்ச்சியில் திருமுருகன்பூண்டி வரையி லான 10 கிலோ மீட்டர் ஓட்ட பிரிவை திருப்பூர் எம்.பி. சுப்பராயன் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். ஏ.வி.பி. பள்ளி வரையிலான 18 வயதுக்குட் பட்டோருக்கான 5 கிலோ மீட்டர் ஓட்டத்தை திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. கே.என்.விஜயகுமாரும், அதே பிரிவில் 40 வயதுக்கு மேற் பட்டோருக்கான ஓட்டத்தை பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ. எம்.எஸ்.எம்.ஆனந்தனும் தொடங்கி வைத்தனர்.

செட்டிபாளையம் பூண்டி ரிங்ரோடு வரையிலான 3 கிலோ மீட்டர் ஓட்ட பிரிவை திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
இதில் மாணவ -மாணவிகள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் ஈரோடு, திருச்சி, நாமக்கல், சென்னை உள்பட வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து என மொத்தம் 3 ஆயிரம் பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஓடினார்கள்.

250-க்கும் மேற்பட்டோர் தன்னார்வலர்களாக பணி யாற்றினார்கள். மாரத்தானில் பங்கேற்றவர்களுக்கு வழி நெடுகிலும் தண்ணீர், குளுக்கோஸ் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்ததுடன், அவசர தேவைக்கு ஆம்புலன் சுகளும் நிறுத்தப்பட்டிருந்தன.

பரிசளிப்பு விழா

மாரத்தான் முடிவில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. 9-வது வார்டு கவுன்சிலர் திவ்ய பாரதி பாலாஜி, யுனைடெட் ஸ்கேன் சென்டர் டாக்டர் லெட்சுமணன், சி.என்.எஸ். ஆஸ்பிட்டல்ஸ் டாக்டர் ரமேஷ், சுதா ரமேஷ் ஆகி யோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள்.

இதில் 4 பிரிவுகளிலும் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றவர்கள் உள்பட 150 பேருக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் டீ-சர்ட், பதக்கம், சான்றிதழ், காலை உணவு வழங்கப்பட்டது.

இதேபோல் மாரத்தானில் பங்கேற்றவர்களில் குலுக்கல் முறையில் 100 பேர் தேர்வு செய்யப்பட்டு, ஷு, வாட்ச் உள் ளிட்ட பொருட்கள் அடங்கிய விளையாட்டு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தி.மு.க. 15 வேலம்பாளையம் பகுதி செயலாளர் ராமதாஸ், மாநகராட்சி கவுன்சிலர்கள் சாந்தி பாலசுப்பிரமணியம், பிரேமலதா கோட்டாபாலு, தங்கராஜ், தனலட்சுமி ராம சாமி, அனுஷ்யா சண்முகம், இந்திராணி உள்பட தொழிலதிபர்கள், தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வெங்கமேடு ஸ்ரீ பாலாஜி பொது சேவை மையம் மற்றும் அங்கேரி பாளையம், வெங்கமேடு ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய் திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img