fbpx
Homeபிற செய்திகள்ஆசிய மேம்பாட்டு வங்கி கடனுதவியுடன் ரூ.87.01 கோடியில் மழை நீர் வடிகால் பணி

ஆசிய மேம்பாட்டு வங்கி கடனுதவியுடன் ரூ.87.01 கோடியில் மழை நீர் வடிகால் பணி

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், கனகராஜ், ரெக்ஸ்லின், சுதா, சரவணக்குமார், இசக்கிராஜா, ராஜதுரை, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், காங்கிரஸ் கவுன்சிலர்கள் கற்பக கனி, சந்திரபோஸ், அதிமுக கவுன்சிலர்கள் வக்கீல்கள் வீர பாகு, மந்திரமூர்த்தி ஆகியோர் தங்களது பகுதிகளில் செய்த பணிகளுக்கு மேயருக்கும், ஆணையருக்கும் நன்றி தெரி வித்தும், சில பணிகள் செய்த தரக் கோரியும் முறைப்படுத்தி பணிகளை மேற்கொள்ளவும் திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் பேசினார்கள்.

அதிமுக கவுன்சிலர்கள் சில குறைகளை சுட்டிக்காட்டி பேசி யதற்கு மேயர் பதில் அளித்தார். மண்டல தலைவர்கள் மேயர் ஆணையரிடம் மனு அளித்தனர்.

மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது: எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த பணிகளை முறைப்படுத்த வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். அனைத்து பகுதிகளுக்கும் பாராட்சமின்றி எல்லா பணிகளும் முழுமையாக செய்து கொடுக்கப்படும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்றார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான முத்தம் மாள் காலனி, ஆதிபராசக்தி நகர், தனசேகர் நகர், ரஹ்மத் நகர், அய்யாச்சாமி காலனி, பொன் சுப்பையா நகர், லூர்தம்மாள்புரம் மற்றும் செயிண்ட் மேரிஸ் காலனி போன்ற பகுதிகளில் கடந்த 2015 மற்றும் 2020ம் ஆண்டுகளில் பெய்த பருவ மழையின் காரணமாக அதிகள வில் வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியது.

மேற்படி பகுதிகளில் மழை நீர் தேங்காமல் தடுக்கும் வகையில் ஆசிய மேம்பாட்டு வங்கியின் கடன், மானியம் மற்றும் உள்ளாட்சியின் பங்கு தொகையுடன் மழைநீர் வடி கால் அமைக்கும் பணிகள் நான்கு சிப்களாக ரூ.87.01 கோடி மதிப்பீட்டில் 36.36 கி.மீ நீளத் திற்கு அமைக்க அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டப்படும் அனுமதியற்ற கட்டு மானங்கள், அனுமதிக்கப் பட்ட வரைபடத்திற்கு மாறுதலாக கட்டி வரும் கட்டிடங்கள் மீது உரிய அறிவிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவும், வார்டுகளில் அவ்வப்போது ஏற்படும் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அறிவிப்பு வழங்கி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளவும், மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை கண்டறிந்து பாது காக்க நடவடிக்கை எடுக்கவும் இளநிலை உதவி பொறி யாளர்களுக்கு (நகரமைப்பு) உதவியாக 5 தொழில்நுட்ப உதவியாளர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் தினக்கூலி அடிப்படையில் நகர்புற வாழ்வாதார மையம் மூலம் தற்காலிகமாக பணியமர்த்தப் பட்டு பணிபுரிந்து வருகிறார்கள்.

தற்போது மாவட்ட ஆட்சியரின் செயல்முறை உத்தரவின்படி 2023-&2024 ஆண் டிற்கான தினக்கூலி ஊதிய நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது. உள்பட 11 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

கூட்டத்தில் துணை ஆணையர் ராஜாராம், செயற்பொறியாளர் பாஸ்கர், பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் பிரின்ஸ் ராஜேந்திரன்,
உதவி ஆணையர்கள் தனசிங், சேகர், ராமச்சந்திரன், திட்டம் ரங்கநாதன், காந்திமதி, மாநகராட்சி நகர்நல அலுவலர் சுமதி, சுகாதார ஆய்வாளர்கள் ராஜபாண்டி, ராஜசேகர், ஸ்டாலின் பாக்கியநாதன், ஹரிகணேஷ், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, அன்னலெட்சுமி, நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், ரெங்கசாமி,

சரவணக்குமார், தெய்வேந்திரன், இசக்கிராஜா, கண்ணன், ராமர், வைதேகி, நாகேஸ்வரி, ஜெய சீலி, மரியகீதா, அந்தோணி பிரகாஷ் மார்ஷல், ராஜேந்திரன், விஜயகுமார், பவாணி மார்ஷல், பொன்னப்பன், ராஜதுரை, முத்துவேல், பேபி ஏஞ்சலின், மெட்டில்டா, அதிஷ்டமணி, ரெங்கசாமி, ஜான்சிராணி, ஜாக்குலின்ஜெயா, ரிக்டா, ராமுத்தம்மாள், ஜான், காந்திமதி, மந்திரமூர்த்தி, பாப்பாத்தி, சுயம்பு, பட்சிராஜ், கற்பககனி, சந்திரபோஸ், விஜயலட்சுமி, கந்தசாமி, ரெக்ஸின், மும்தாஜ், சுப்புலட்சுமி மற்றும் ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img