தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை கழகம் லிமிடெட் மூலம் நிர்வகிக்கப்படும், தமிழ்நாடு வளர்ந்து வரும் துறை விதை நிதியம், சென்னையை சேர்ந்த ஆன்லைன் மருந்தகமான மிஸ்டர்மெட் நிறுவனத்திற்கு 4.1 கோடி நிதியுதவியை அறிவித்தது.
தமிழ்நாடு வளர்ந்து வரும் துறை விதை நிதியத்துடன் இணைந்து பீஜ் நெட்ஒர்க் மற்றும் விஷால் எண்ட்ரப்ரணர் எல்எல்பி நிறுவனங்களும் இணைந்து இந்த நிதியுதவியை வழங்கினர்.
சந்தைப்படுத்தல், விரிவாக்கம், மருந்து விநியோகச் சங்கிலி மற்றும் சுகாதார சேவை வழங்குநர் துறைகளுக்குள் புதிய முயற்சிகளை ஆராய்வதற்கும் இந்த நிதியை மிஸ்டர்மெட் நிறுவனம் பயன்படுத்தும்.
இந்தியாவில் 2000க்கும் மேற்பட்ட நகரங்கள், நகரங்கள் மற்றும் கிராமங்களில் பரவியுள்ள 50,000 க்கும் மேற்பட்ட பயனர்களை கொண்டுள்ள மிஸ்டர்மெட் நிறுவனம் ஜூலை 31, 2023 நிலவரப்படி 26 கோடிக்கும் அதிகமான வருடாந்திர வருவாயை பதிவு செய்துள்ளது.
மிஸ்டர்மெட் நிறுவனத்தின் இணை நிறுவனர் திரு.தேவாஷிஷ் சிங் கூறியதாவது:
சிறிய நிறுவனமாக இருந்தாலும் வணிகத்தில் இருந்து வாடிக்கையாளரை அடைவதில் உள்ள சவால்களை உணர்ந்துள்ளோம்.
எங்கள் நிறுவனத்தை மின்னணு மருந்தியல் துறையில் ஒரு லாபகரமான மற்றும் குறிப்பிடடதக்க நிறுவனமாக உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும் என்றார்.
‘மிஸ்டர்மெட் நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணத்தில் பங்குதாரர்களாக இருப்பதில்
மகிழ்ச்சியடைகிறோம்’, என்று தமிழ்நாடு வளர்ந்து வரும் துறை விதை நிதியத்திலிருந்து சண்முகபிரவீன் பகிர்ந்துகொண்டார்.
மிஸ்டர்மெட், புற்று நோய், சிறுநீரக நோய்கள், இதயக் கோளாறுகள், எச்.ஐ.வி/எய்ட்ஸ், மாற்று அறுவை சிகிச்சை, ஹெபடைடிஸ் மற்றும் பலவற்றிற்கு முக்கிய மருந்துகளை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்ற இந்தியாவின் முன்னணி ஆன்லைன் மருந்தகம் ஆகும்.