தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ போத்தி விநாயகர் கோவிலில் சதூர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் அன்னதானத்தை அமைச்சர் கீதா ஜீவன் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தனர். கோவில் தர்மகர்த்தா என்.பி.ராஜா முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் மாமன்ற உறுப்பினர் கீதா முரு கேசன் ரெங்கசாமி முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், செல்வகுமார் அறங்காவலர்கள் கோட்டு ராஜா, செந்தில்குமார் மாவட்ட பிரதிநிதி பிரபாகரன் திமுக நிர்வாகிகள் கருணா, மணி மற்றும் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.