Homeபிற செய்திகள்கோவை: டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை: டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.4க்குட்பட்ட விசுவாசபுரம் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்த மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கொசு ஒழிப்பு பதிவேடுகளை ஆய்வு செய்து, மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றவும், தேவையில்லாத பொருட்களை அகற்றி, பொது மக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப் புழுக்கள் உள்ளனவா என்பதை கண்டறியும் பணிகளில் ஈடுபடுமாறு அறிவுரைகளை வழங்கினார்.

உடன் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், மாமன்ற உறுப்பினர் கதிர்வேலுசாமி, உதவி ஆணையர் (பொ) நூர் அகமது, உதவி செயற்பொறியாளர் செந்திலபாஸ்கர், உதவி நகரமைப்பு அலுவலர் விமலா, மண்டல சுகாதார அலுவலர் இராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் சக்திவேல், சுகாதார ஆய்வாளர் லோகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img