fbpx
Homeபிற செய்திகள்நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் விநியோகம்

நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் விநியோகம்

வேளாண் பொறியியல் துறை சார்பில் வேளாண் உபகரணங்கள் பெற்ற நீலகிரி மாவட்ட விவசாயிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைத்து துறைகளின் சார்பில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்கள்.

அதனடிப்படையில் வேளாண் துறையை தனித்துறையாக அறிவித்து விவசாயிகள் பயன்பெறும் வகையில், சூரிய மின் வேலி அமைத்தல், மதிப்பு கூட்டும் இயந்திரங்கள், களையெடுப்பான் கருவி, துகளாக்கும் கருவி, மின்மோட்டார் பம்ப் செட்டுகள் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களின் வாயிலாக, விவசாயிகளின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ததன் காரணத்தினால் விவசாயிகள் அதிக அளவில் உற்பத்தி செய்து வருகிறார்கள்.

மேலும், தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வேளாண் இயந்திரங்களை வழங்கி வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளின் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படுவதோடு, குறுகிய காலத்தில் பயிர்சாகுபடி மேற்கொள்ளவும் வழி வகை செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் வேளாண் நிதி நிலை 2023-2024 அறிக்கையின்படி சிறுகுறு விவசாயிகள் சிறிய இயந்திரங்கள் மானியத்தில் பெற்று பயன் பெறும் நோக்கத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 5,000 பவர் டில்லர்கள் / விசை களையெடுப்பான் கருவிகள் ரூ.41.23 கோடி மானியத்தில் வழங்க இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு ‘உழவன் செயலிகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானிய அடிப்படையில் அதிகபட்சமாக பவர் டில்லர்களுக்கு 85 ஆயிரமும்;, விசை களையெடுப்பான்களுக்கு ரூ.65 ஆயிரமும் மானியமாக வழங்கப்படுகிறது.

மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்த சிறுகுறு விவசாயிகளுக்கு அவர்களின் பங்களிப்பு தொகையினை குறைத்து உதவிடும் வகையில் நடைமுறையில் உள்ள மானியத்துடன் 20 சதவீதம் கூடுதல் மானியம் மாநில அரசு நிதியிலிருந்து வழங்கப்படுகிறது.

இதனால் சிறுகுறு விவசாயிகள் வேளாண் இயந்திரமயமாக்கும் துணை இயக்கத்திட்டத்தின் கீழ் பயனடைவதோடு வேளாண் இயந்திரமயமாக்குதல் முழுமையான நோக்கமும் ஏற்ற தாழ்வின்றி நிறைவேறும் அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் இத்திட்டத்தின் பயன்கள் சென்றடைந்து வேளாண் வளர்ச்சி உறுதி செய்யப்படுகிறது.

அதனடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் 06.09.2023 அன்று குன்னூர் இளித்தொரையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் மூலம் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனால் 11 விவசாயிகளில், 8 விவசாயிகளுக்கு பவர் டில்லர்களும், 3 விவசாயிகளுக்கு விசை களையெடுப்பான் கருவிகளும் வழங்கப்பட்டது.

வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் உதகை வட்டத்தில் 12 விவசாயிகளுக்கு ரூ.10.05 இலட்சம் மானியத்திலும்;, குன்னூர் மற்றும் கோத்தகிரி வட்டத்தில் 11 விவசாயிகளுக்கு ரூ.7.75 லட்சம் மானியத்திலும்;, கூடலூர் வட்டத்தில் 4 விவசாயிகளுக்கு ரூ.2.13 லட்சம் மானியத்திலும்; என மொத்தம் 27 விவசாயிகளுக்கு மொத்தம் 21 பவர் டில்லர்கள், 6 விசை களையெடுப்பான் கருவிகள் என ரூ.19.93 லட்சம் மானியத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

பவர் டில்லர் பெற்ற விவசாயி கோபால் கூறியதாவது:
என் பெயர் கோபால்;. நான் சுள்ளிக்கூடு கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு 1.5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் காரட் விவசாயம் செய்து வருகிறேன். எனக்கு தமிழ்நாடு அரசின் வேளாண் பொறியியல் துறை சார்பில் 50 சதவீதம் மானியத்தில் (அதிக பட்சமாக ரூ.85,000/-) பவர் டில்லர் வழங்கப்பட்டுள்ளது.

மனிதர்களை கொண்டு 10 நாட்கள் செய்கின்ற வேலையினை, இந்த பவர் டில்லர் இயந்திரம் மூலம் 3 அல்லது 4 மணி நேரத்தில் செய்து முடித்து விடலாம். எனக்கு விவசாயம் செய்வதற்கு இந்த இயந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

விவசாயிகள் பயன்பெறும் வகையில் இது போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

களையெடுப்பான் கருவி பெற்ற பெண் விவசாயி சாந்தி கூறியதாவது:
நான் மேலூர் பகுதியில் வசித்து வருகிறேன். என்னிடம் 2.5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம்.

எனக்கு தமிழ்நாடு அரசின் வேளாண் பொறியியல் துறை சார்பில் ரூ.47,144 மதிப்பில் (ரூ.23,572 மானியத்தில்) களையெடுப்பான் கருவி வழங்கப்பட்டுள்ளது.
இக்கருவி களையெடுப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

விவசாயிகளின் வாழ்வாதாரம் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில், இது போன்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நானும் என்னைப் போன்ற விவசாயிகளும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் இது போன்ற பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, நீலகிரி மாவட்ட விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

நி.சையத்முகம்மத்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.
இரா.சரண்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி).
நீலகிரி மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img