கயத்தாறு யூனியன் பகுதியில் ரூ.94 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளை கனிமொழி எம்பி மற்றும் சமுகநலன் மற்றும் மகளீர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்து நலத் திட்ட உதவிகள் வழங்கினார்.
கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செட்டிகுறிச்சி கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.35 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி, இதனைத்தொடர்ந்து திருமலங்குறிச்சி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பெரியசாமிபுரம் கிராமத்தில் ரூ.39 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய கால்நடை கிளை மருத்துவமனை திறந்து வைத்தனர்.
உசிலங்குளம் கிராமத்தில் மக்கள் களம் நிகழ்ச்சி, அந்த பஞ்சாயத்துக்கு சுகாதார திடக்கழிவு பொருட்களை பெறு வதற்கான ஆட்டோ ஊரக வளர்ச்சி துறை சார்பில் வழங்கப்பட்டது. அய்யனாரூத்து கிராமத்தில் பாராளுமன்ற நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு நிகழ்ச்சி ஆகியன நடந்தது.
நிகழ்ச்சிகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார்.
கயத்தாறு மத்திய ஒன்றிய செயலாளர் கருப்பசாமி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி திட்டப் பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்ட உத விகள் வழங்கினார்.
மேலும் மானங்காத்தான் கிராமத்தில் கட்டப்பட்டு வரும் காலனி வீட்டு பணிகளையும் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் கழுகுமலை மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் செட்டிகுறிச்சி முத்து லட்சுமி கிருஷ்ணசாமி, பஞ்சாயத்து துணைத் தலைவர் பேரூராட்சி ஐயப்பன், திருமங்கலகுறிச்சி கருப்பசாமி, அய்யனாரூத்து சண்முகையா, தெற்கு இலந்தைகுளம் செல்வி ரவிக்குமார், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் செல்லையா, திமுக மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ், அரசு வழக்கறிஞர் ராமச்சந்திரன், பேரூர் கழகச் செயலாளர் சுரேஷ்கண்ணன், அய்யனார் ஊத்து முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுந்தர பாண்டியன், பெரியசாமிபுரம் திமுக கிளை கழக செயலாளர் பூலையா பாண்டியன், கயத் தார் ஓன்றிய இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் மாரியப்பன், பேரூராட்சி கவுன்சிலர் நயினார் பாண் டியன் உட்பட கிளைக் கழக செயலாளர்கள், கழக தொண்டர்கள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.