fbpx
Homeபிற செய்திகள்திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது- கனிமொழி எம்.பி. பேச்சு

திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது- கனிமொழி எம்.பி. பேச்சு

திமுக அரசு தேர்தலில் அளித் துள்ள வாக்குறுதிகளை ஒவ்வொன் றாக நிறைவேற்றி வருகிறது என கழுகுமலை நடந்த விழா வில் கனிமொழி எம்பி பெரு மிதத்துடன் பேசினார்.

கழுகுமலை அருகே கயத்தாறு மேற்கு ஒன்றியம் கட்டாலங்குளத்தில் ரூ.1.61 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிக்கான பூமி பூஜை கழுகுமலை பேரூராட்சி 5-வது வார்டு அம்பேத்கர்நகரில் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி மற்றும் பம்ப் ரூம் அமைப் பதற்கான பணிகள், அதே பகுதியில் ரூ.13 லட்சம் மதிப்பில் திறந்த வெளி கிணற்றை தூர்வாரி பம்ப் அறை அமைத்து பைப் லைன் விஸ்தரிப்பு பணி மற்றும் கழு குமலை பேரூராட்சிக்கு உட் பட்ட செந்தில்நகரில் ரூ.55.20 லட்சம் மதிப்பில் அமைக்கப் பட்டபூங்கா திறப்பு விழா ஆகி யவை நடந்தது.

விழாவிற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித் தார்.தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.

கனிமொழி எம்.பி புதிய திட்டங்களுக்கு அடிக் கல் நாட்டி, முடிவற்றதிட்டங் களை தொடங்கி வைத்தார். மேலும் மரக் கன்றுகள் நட்டினார். தொடர்ந்து தெற்கு கழுகு மலை, கே.வெங்கடேஸ் வரவேற்றார்

கே.துரைச்சாமிபுரம் ஆகிய ஊராட்சிகளில் ‘மக்கள் களம்‘ என்ற மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந் தது. இதில் கலந்து கொண்டு 49 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகள் 10 பேருக்கு உத வித்தொகை பெறுவதற்கான ஆணையும், 6 பேருக்கு உழ வர் அட்டையும் வழங்கினார்.

தொடர்ந்து பொதுமக்களிடமி ருந்து குறைகள் தொடர்பான மனுக்களை பெற்ற கனிமொழி எம்பி பேசியதாவது: ‘இப்பகு தியில் சிமென்ட் சாலைகள், குடிநீர் தொட்டிகள், கலைய ரங்கம், பேவர் பிளாக் சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டப்ப ணிகள் நடைபெற்று வருகிறது.

திமுக அரசு தேர்தலில் அளித் துள்ள வாக்குறுதிகளை எல்லாம் ஒவ்வொன்றாக நிறை வேற்றி வருகிறது. இந்த ஆட்சி வாக்குறுதிகளை மட்டுமல்லாமல் மக்களின் கோரிக்கைக ளையும் நிறைவேற்றி வருகிறது’. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி வட்டாட்சியர் லெனின், கோட்டாட்சியர் ஜெயா, உதவி செயற்பொறியாளர் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், பேரூராட்சி மன்ற தலைவர் அருணா சுப்பிரமணியன், பேரூர் செயலாளர் கிருஷ்ணகு மார், வார்டு கவுன்சிலர்கள் மரியக்கத்தின் மேரி, முத்து, செல்லத்தாய், பூமாதேவி, ஜெயக்கொடி, துரைப் பாண்டி, சங்கர், கட்டாலங் குளம் ஊராட்சித்தலைவர் தம்பா, துணைத்தலைவர் மாரியம்மாள், தூத்துக்குடி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் அய்யாதுரை, கயத்தார் பேரூர் செயலா ளர் சுரேஷ்கண்ணன், மற்றும் ஒன்றிய உறுப்பினர் கிளை செயலாளர்கள் , கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img