சர்வதேச போட்டியில் குண்டு எறிதலில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்த தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவிக்கு அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து தெரிவித்தார். மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் பெங்களூரில் நடைபெற்றது.
இதில் 17க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து கலந்து கொண்டனர். இதில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவி முத்து மீனா கலந்து கொண்டு இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார். இதனை தொடர்ந்து அவர் அமைச்சர் கீதாஜீவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.



