திருப்பூர் வித்ய விகாஸ் மெட்ரிக் பள்ளியும், நியூஸ் 7 செய்தி தொலைக்காட்சியும் இணைந்து “துளிரும் விஞ்ஞானி” எனும் நிகழ்ச்சி வித்ய விகாஸ் பள்ளி வளாகத்தில் நடத்தியது. இப்போட்டியில் திருப்பூர் மாவட்டத்திலிருந்து 35 பள்ளிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தாங்கள் உருவாக்கிய அறிவியல் சாதனங்களுடன் கலந்து கொண்டனர்.
இதில் ஜூனியர் பிரிவில் திருப்பூர் ஃப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளியைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி பி.சுதிஷ்னா, இயற்கையை பாதுகாக்கும் நோக்கில் இயற்கை முறையிலும், மறுசுழற்சி செய்யக்கூடிய வகையிலும் தண்ணீர் புட்டிகளை உருவாக்கி முதல் பரிசு பெற்றார்.
இப்போட்டியில் முதல் பரிசு பெற்றதன் மூலம் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவியையும் அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர் டாக்டர். சிவசாமி, செயலாளர் டாக்டர் சிவகாமி, இயக்குநர் சக்தி நந்தன், துணைச்செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.



