fbpx
Homeபிற செய்திகள்குறுக்குச்சாலை ஊராட்சி கிராம சபை கூட்டம்- வளர்ச்சி பணி குறித்து விவரம்

குறுக்குச்சாலை ஊராட்சி கிராம சபை கூட்டம்- வளர்ச்சி பணி குறித்து விவரம்

தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச்சாலை ஊராட்சி கக்கரம் பட்டி கிராமத்தில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் தலைவர் முனியம்மாள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஓட்டப் பிடாரம் ஒன்றிய துணைத் தலைவர் காசி விஸ்வநாதன் கலந்து கொண்டார். கிராம சபையில், குறுக்கு சாலை பகுதிகளில் பேவர் பிளாக் சாலை, சிமெண்ட் சாலை அமைக்கக் வேண்டும்.

பெரியநத்தம் கிராமத்தில் பேவர் பிளாக் சாலை, சமுதாய நலக்கூடம், வடிகால் வசதி வேண்டும். வடக்கு சிந்தலக்கட்டையில் பேவர் பிளாக் சாலை, வாறுகால் வசதி, தெற்கு சிந்தலக்கட்டை கிராமத்தில் சிமெண்ட் சாலை, சமுதாய நலக்கூடம், மகளிர் குழு கட்டிடம், அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும்.

வேலாயுதபுரம் கிராமத்தில் வாறுகால் வசதி, பேவர் பிளாக் சாலை, சுடுகாடு கொட்டகை, மற்றும் கக்கரம்பட்டி பிசி தெருவில் சுடுகாடு கொட்டகை, பேவர் பிளாக் சாலை, சிமெண்ட் சாலை வசதிகள் வேண்டும் என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பஞ்சாயத்து துணை தலைவர் வீரலட்சுமி, வார்டு மெம்பர்கள் வீரபத்திரன், தங்கமாரி லூர்து மேரி, கற்பகவல்லி மற்றும் பஞ்சாயத்து பற்றாளர் அன்னலட்சுமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், ஊர் பெரியவர்கள், பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img