fbpx
Homeபிற செய்திகள்மோகன்ஸ் அகாடமி கோடைக்கால பேட்மிண்டன் போட்டிகள்: மாணவ -மாணவிகள் அசத்தல்

மோகன்ஸ் அகாடமி கோடைக்கால பேட்மிண்டன் போட்டிகள்: மாணவ -மாணவிகள் அசத்தல்

திருப்பூர் பங்களா ஸ்டாப் தி திருப்பூர் கிளப்பில் மோகன்ஸ் பேட்மிண்டன் அகாடமி சார்பில் கோடைகால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் கலப்பு பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற அனைவருக்கும் திருப்பூர் பேட் மிண்டன் செயலாளர் மோகன் குமார் பரிசுகளை வழங்கினார்.

இதில் மாணவிகள் பிரிவில் 15 வயது கீழ் பிரிவில் திருப்பூர் கிட்ஸ் கிளப் சர்வதேச பள்ளியில் பயிலும், மோகன் அகாடமி மாணவி பவிஷ்னா முதலிடம் இடம் பிடித்தார்.

திருப்பூர் பிரண்ட்லைன் பள்ளியில் பயிலும் மோகன் அகாடமி மாணவி நிவேதா இரண்டாம் இடம் பிடித்தார். 13 வயது மாணவி பிரிவிலும் மிதுனுஷ்கா முதலிடம் பிடித்தார். 11 வயது மாணவி பிரிவில் மிதுனுஷ்கா முதலிடமும், பவிஷ்னா இரண்டாம் இடம் பிடித்தார்கள்.

15 வயது மாணவ பிரிவில் கவியுகன் முதலிடமும், கவின் குமார் இரண்டாம் இடமும் பிடித்தனர். 13 வயது மாணவர்கள் பிரிவில் கவின் குமார் முதலிடமும், பிரகதீஷ், 11 வயது மாணவ பிரிவில் சக்தி ஜெயின் முதலிடமும், கவியாதர்ஷன் இரண்டாம் இடம் பிடித்தார்கள்.

9 வயது மாணவ பிரிவில் கவியாதர்ஷன் முதலிடமும்,சாத்வீக் இரண்டாம் இடமும் பிடித்தார்கள். பெற்றோர் இரட்டையர் கலப்பு பிரிவில் மோகன் குமார், வம்சி கிருஷ் முதலிடமும் பெற்றார்கள். கார்த்திகேயன், கவின் குமார் இரண்டாம் இடம் பிடித்தார்கள், வெற்றி பெற்ற, முதலிடம், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு , அனைவருக்கும் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது.

அரையிறுதிக்கு தகுதி பெற்றவர்கள், போட்டியில் கலந்து கொண்ட அனை வருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை மோகன் அகாடமி சார்பில் செய்யப்பட்டிருந்தது

விழாவிற்கு பிரண்ட்லைன் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செந்தில், பேட்மின்டன் பயிற்சியாளர்கள் ராம் திலகா, கோகுல், ஸ்வீட் சாம்ராஜ், மைதிலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img