fbpx
Homeபிற செய்திகள்மாப்பிள்ளையூரணியில் இலவச கண்சிகிச்சை முகாம்

மாப்பிள்ளையூரணியில் இலவச கண்சிகிச்சை முகாம்

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியான அழகாபுரி அங்கன்வாடி மையத்தில் அகர்வால் கண் மருத்துவமணை மருத்துவர்கள் சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமிற்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் நகர கூட்டுறவு வங்கி கடன்சங்க தலைவருமான கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமில் தூரப்பார்வை, கிட்டப்பார்வை, வெள் ளெழுத்து, கண்ணீர் அழுத்த நோய், கண்புரை, சர்க்கரை விழித்திரை நோய், ஆகியவற்றிக்கு கண்பரிசோதனை மற்றும் ஆலோசணைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் ஆரோக்கிய மேரி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, சக்திவேல், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், கௌதம், உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொது மக்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img