ஊட்டியின் மையப் பகுதியில் அமைந்துள்ள மார்க்கெட்டில் உள்ள கடைகள் ஒதுக்கிட்டு விவகாரத்தில் உதகை நகராட்சி நிர்வாகத்திற்கும் மார்க்கெட் கடை வியாபாரிகளுக்கும் இடையே கடந்த சில காலமாக கருத்து வேறுபாடுகள் இருந்து வந்த நிலையில் நேற்று நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவிடம், உதகை நகராட்சி மார்க்கெட் வியா பாரிகள் சங்க நிர்வாகிகள் தங்கள் கோரிக்கைகளை வைத்தனர்.
எம்.பி. ஆ ராசா மார்கெட் சங்க நிர்வா கிகளிடம் விவரங்களை கேட்டறிந்து, தானே பொறுப்பேற்று தற்காலிக கடைகளைத் கட்டி தருவதாக உறுதியளித்தார்.
அதனால் வியாபாரிகள் அனைவரும், நீலகிரி எம்.பி., ஆ.ராசாவுக்கு நன்றி தெரிவித்தனர்.
அந்த சந்திப்பின்போது மாவட்ட ஆட்சி தலைவர் ச.ப.அம்ரித், உதகை நகர மன்ற துணை தலைவர் ரவிகுமார் மற்றும் மாநில திமுக பொறியாளர்
அணி துணை செயலாளர் பரமேஷ்குமார் உட்பட மார்க்கெட் சங்க நிர்வாகிகள்,
பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.