fbpx
Homeபிற செய்திகள்வெள்ளலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு விழா

வெள்ளலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு விழா

கோயமுத்தூர் நார்த் ரவுண்ட் டேபிள் 20, கோயமுத்தூர் நார்த் லேடீஸ் சர்க்கிள் 11,மற்றும் முன்னால் மாணவர்கள் டயமண்ட் ஜூபிலி கமிட்டி ஆகியோர் இணைந்து வெள்ளலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கட்டிய நான்கு புதிய வகுப்பறைகள் துவக்க விழா நடைபெற்றது..

கோயமுத்தூர் நார்த் ரவுண்ட் டேபிள் 20, கோயமுத்தூர் நார்த் லேடீஸ் சர்க்கிள் 11, ஆகியோர் இணைந்து அரசு பள்ளிகளுக்கு வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் கட்டி கொடுப்பது, மற்றும் இலவச மருத்துவ முகாம் மற்றும் சிகிச்சைகளுக்கு நிதி உதவி ,கல்வி உதவி தொகை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உத விகளை செயல்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகள் பயன் பெறும் 75 லட்சம் ரூபாய் செலவில் நான்கு புதிய வகுப்பறைகளை கோயமுத்தூர் நார்த் ரவுண்ட் டேபிள் 20,கோயமுத்தூர் நார்த் லேடீஸ் சர்க்கிள் 11 மற்றும் வெள்ளலூர் அரசு மேல்நிலை பள்ளி முன்னாள் மாணவர்கள் டயமண்ட் ஜூபிலி கமிட்டி ஆகியோர் இணைந்து கட்டி கொடுத்துள்ளனர்.

இதற்கான திறப்பு விழா கோயமுத்தூர் நார்த் ரவுண்ட் டேபிள் 20, தலைவர் ஜிதேந்தர் சபர்வால், கோயமுத்தூர் நார்த் லேடீஸ் சர்க்கிள் 11 தலைவர் தியா கிருபாகர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், புராஜக்ட் கன் வீனர்கள் தீபெந்தர் சிங், வைஷ்ணவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந் தினராக ஸ்டெப்ஸ் சோர்சிங் இந்தியா நிறு வனத்தின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணகுமார் கலந்து கொண்டு புதிய வகுப்பறைகளை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், வெள்ளலூர் அரசு மேல்நிலை பள்ளி முன்னாள் மாணவர்கள் டயமண்ட் ஜூபிலி கமிட்டி தலைவர் பால தண்டபாணி மற்றும் நிர்வாகிகள் நாகராஜன், இளங்கோ, பால்ராஜ், வெள்ளலூர் பாலகிருஷ்ணன், தாமோ தரன், முனுசாமி, தர்மலிங்கம், மீனாட்சி சுந்தரம், ராஜன், சந்தானம் உட்பட பலர் கலந்து கொண்டனர்

படிக்க வேண்டும்

spot_img