திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 16 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் ஊட்டசத்து ஆகியவற்றை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வழங்கினார்கள்.
பின்னர், அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலெட்சுமி, கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர் கீதா முருகேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மகளிரணி அமைப்பாளர் கஸ்தூரி தங்கம், தகவல் தொழில்;நுட்ப அணி துணை அமைப்பாளர் நாகராஜன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மேகநாதன், மாநகர மருத்துவரணி அமைப்பாளர் அருண்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த கப்ரியேல்ராஜ், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், கவுன்சிலர்கள் சரவணக்குமார், ராமர், ஜெயசீலி, வைதேகி, விஜயலெட்சுமி, கந்தசாமி, வட்ட செயலாளர்கள் ரவீந்திரன், மூக்கையா, சிங்கராஜ், கங்காராஜேஷ், வட்ட பிரதிநிதிகள் பாஸ்கர், துரை, செந்தில்குமார், பகுதி இளைஞரணி அமைப்பாளர் கள் ரவி, சூர்யா, மகளிரணி ரேவதி, சத்யா, பெல்லா, உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், கருணா, மற்றும் ஆல்பர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.