fbpx
Homeபிற செய்திகள்டாக்டர் வி.ஜி.மோகன்பிரசாத்துக்கு ரோட்டரி விருது வழங்கி கௌரவிப்பு

டாக்டர் வி.ஜி.மோகன்பிரசாத்துக்கு ரோட்டரி விருது வழங்கி கௌரவிப்பு

கோவை டாக்டர் வி ஜி மோகன் பிரசாத்திற்கு ரோட்டரி விருது வழங்கி கௌரவித்தது. தொழில் சேவைக்கான விருதுகளை சமூக நலனுக்காக உழைக்கும் நபர்களுக்கு சர்வதேச ரோட்டரி வழங்கி கௌரவிக்கிறது .

டாக்டர் வி.ஜி.மோகன் பிரசாத்துக்கு 2008ம் ஆண்டு கோவை மில்லினியும் ரோட்டரி சங்கம் சிறந்த தொழில் சேவை விருது வழங்கி கௌரவித்தது . மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனால் இந்த விருது வழங்கப்பட்டது .

14 ஆண்டுகள் கழித்து தொழில் சேவையில் மிக உயர்ந்த விருதான, “For the sake of Honor” என்ற விருதை ரோட்டரி மாவட்டம் 3203 சமீபத்தில் நடந்த ரோட்டரி மாநாட்டில் வழங்கிப் பாராட்டியது.

விழாவில் ரோட்டரி 3203 ஆளுநர் இளங்குமரன் விருதை வழங்கினார். ரோட்டரி முன்னாள் ஆளுநர் ஈரோடு லோட்டஸ் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் இ.கே. சகோதவன், டாக்டர் சி.பி.எஸ்.சுமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img