தூத்துக்குடி திரவிய புரம் அலெக்ஸ் ஆபிரகாம் குடும்பத்தினரால் மேற்கு வங்காளம் மோதிராம் கிராமத்தில் புதிய கிறிஸ்தவ ஆலயம் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தூத்துக்குடி திரவிய புரம் சகல பரிசுத்தவான்களின் ஆலய குடும்பத்தினர் சரோஜா & ஞானராஜ் புதல்வர் அலெக்ஸ் ஆபிரகாம் மூலமாய் மேற்கு வங்காள பகுதியில் மோதிராம் கிராமத்தில் ஆலயம் கட்டப்பட்டது.
புதியதாக கட்டப்பட்ட மோதிராம் கிறிஸ்துவ ஆலயம் குருவானவர் அருள்திரு தமிழ்ச்செல்வன் தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அலெக்ஸ் ஆபிரகாம் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் சரோஜா ஞான்ராஜ், சகோ தனுஷ் திருவாளர்கள் ஜெயபால், சண்முகவேல் வெயிலு முத்து மாசிலாமணி மற்றும் அப்பகுதி சபையைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்துவ மக்கள் கலந்து கொண்டார்கள்.



