சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி இறுதி பொதுத்தேர்வில் கரூர் பரணி வித்யாலயா பள்ளி மாணவர்கள் அபார சாதனை புரிந்து கரூர் மாவட்டத்திற்கு பெருமை தேடித் தந்துள்ளனர்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஜெயபிரகாஷ் 491/500 மதிப்பெண் மற்றும் கணிதத்தில் 100/100 மதிப்பெண் பெற்று அபார சாதனை புரிந்துள்ளார். மேலும் ஜெர்லின் 489/500 மதிப்பெண் மற்றும் கணிதத்தில் 100/100 மதிப்பெண்ணும், அபிநிவேதா 485/500 மதிப்பெண் மற்றும் சமூக அறிவியலில் 100/100 மதிப்பெண்ணும், நிவி ரூபிகா 484/500 மதிப்பெண்ணும், ரீனா 483/500 மதிப்பெண்ணும் தமிழில் 100/100 மதிப்பெண்ணும், ஹரி பிரசாத் 481/500 மதிப்பெண்ணும் கணிதம் மற்றும் சமூக அறிவியலில் 100/100 மதிப்பெண்ணும், ஸ்ரீ சுகந்தன் 481/500 மதிப்பெண்ணும் தமிழில் 100/100 மதிப்பெண்ணும், ஜெசிந்த் 481/500 மதிப்பெண்ணும் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கலை பாடப்பிரிவில் நிதின் 485/500 மதிப்பெண் பெற்றுள்ளார். அறிவியல் பாடப்பிரிவில் ரவீனா 477/500 மதிப்பெண்ணும் ருக்மாங்கதன் 476/500 மதிப்பெண்ணும், கிஷோர்குமார், பிரேம் குமார் மற்றும் ஹர்ஷபிரதா 474/500 மதிப்பெண்ணும், விக்னேஷ் 471/500 மதிப்பெண்ணும், அபிஷேக் எஸ் பிஜு 470/500 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர்.
மேலும் மாணவர் பாபு கணேஷ் ஐ.பி பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளார். அண்ணா பல்கலைக் கழக இன்ஜினியரிங் கட் ஆப் மதிப்பெண் 22 மாணவர்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது பரணி வித்யாலயா பள்ளி, குரோத் அகாடமி போட்டித் தேர்வு பயிற்சி மையத்துடன் இணைந்து 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நீட், ஜே.இ.இ தேர்வுக்கான சிறப்பு பயிற்சியினை பள்ளியிலேயே நடத்தி வருகிறது.
பாராட்டு விழா
சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளி இறுதி பொதுத்தேர்வில் அபார சாதனை படைத்த மாணவர்களுக்கும் அவர்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பரணி கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் சொ.ராமசுப்பிரமணியன், முதல்வர் சு.சுதாதேவி, துணை முதல்வர் ரா.பிரியா, ஒருங்கிணைப்பாளர் சி.ஜெர்லின் கிரிஸ்டல், குரோத் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் கவிதா ராமசுப்ரமணியன், மற்றும் இருபால் ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர் சா.மோகனரங்கன் தலைமை தாங்கினார், செயலர் பத்மாவதி மோகனரங்கன் மற்றும் அறங்காவலர் மோ.சுபாஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் சாதனை புரிந்த மாணவர்களும் ஆசிரியர்களும் பொன்னாடையும் பரிசும் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.



