நாலுமாவடி புதுவாழ்வு சங்கத்தின் பங்களிப்புடன், மருதூர் கீழக்கால் வாய்க்காலில் திட்டப் பணிகளை ஆட்சியர் செந்தில்ராஜ் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வல்லநாடு ஊராட்சி, மருதூர் கீழக்கால் வாய்க்காலில் உள்ள நம்பர் 3 காட்டுமானாவாரி மதகினை நீர்வளத்துறையின் சார்பில் தாமிரபரணி வடிநிலக் கோட்டத்தின் மூலம் அரசு நிதி ரூ.11,42,500 மற்றும் நாலுமாவடி புதுவாழ்வு சங்கத்தின் பங்களிப்புத்தொகை ரூ.11,42,500 என மொத்தம் ரூ.22,85,000 மதிப் பீட்டில் மறுகட்டுமானப் பணிகள் மேற்கொள்வதற்கான திட்டப் பணிகளை மாவட்ட ஆட் சியர் செந்தில் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா , செயற்பொறியாளர் (தாமிரபரணி வடிநிலக் கோட்டம்) மாரியப்பன், உதவி செயற்பொறியாளர் ஆதிமூலம், திருவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமார், நாலுமாவடி புதுவாழ்வு சங்கத்தின் பொறுப்பாளர்கள் எட்வின், சாந்தகுமார், வல்லநாடு விவசாய சங்கத் தலைவர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



