மதுரை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் குழந்தைகள் நேயப் பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.18.06/- கோடி மதிப்பீட்டில் 56 அரசுப் பள்ளிகளில் 117 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட் டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தெரிவித்தார்.
செய்தியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்ட அவர் கூறியதாவது:
தமிழ்நாடு அரசு மாணவர் களின் கற்றல் திறனை அதிகரித்து, அவர்களின் கல்வித் தரத்தினை உயர்த்திட ‘இல்லம் தேடி கல்வி, ‘எண்ணும் எழுத்தும்’ ‘நம் பள்ளி நம் பெருமை’ போன்ற சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
காலையில் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர்கள் பசியின்றி கல்வி கற்க 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் ‘முதல மைச்சரின் காலை உணவுத் திட் டம்’ என்ற மகத்தான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஊரகப் பகுதிகளில் ஏற்கனவே கட்டப்பட்டு செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வாயிலாக பராமரிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் சிறந்த முறையில் கல்வி கற்பதற்கு ஏற்ற இணக்கமான சூழல் அவசியமாகும்.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளின் உட்கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்திட, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், பாரா ளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம், நமக்கு நாமே திட்டம். ஊராட்சி ஒன்றிய பொது நிதி. கனிம நிதி, சமூக பொறுப்பு நிதி ஆகிய திட்டங்களின் கீழ் பள்ளிக் கட்டடங்கள் கட்டுதல், கழிப் பறைகள், சமயலறை கூடங்கள் கட்டுதல், குடிநீர் பணிகள் மற்றும் சுற்றுச்சூழல் கட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கற்றல் கற்பித்தலுக்கு உகந்த சூழலை வழங்குவதற்கும். மாணவர் வருகையை அதிகரிப்பதற்கும் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவதற்கும் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமான ஒன்றாகும்.
அதன்படி, முதல்வர் கடந்த 1.02.2023-அன்று பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் ரூ.784/- கோடி மதிப்பீட்டில் 5,351 புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணிக்கான குழந்தை நேயப் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் ரூ.18.06/- கோடி மதிப்பீட்டில் 56 அரசுப் பள்ளிகளில் 117 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் 11 திட்டப்பணிகள் செயலளவில் நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள வகுப்பறைக் கட்டடங்களுக்கான பணிகளையும் துரிதமாக மேற்கொண்டு விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் மா.சௌ.சங்கீதா.



