fbpx
Homeபிற செய்திகள்கோவையில் 75 வயது முதியவர் யானை தாக்கி உயிரிழந்த பரிதாபம்

கோவையில் 75 வயது முதியவர் யானை தாக்கி உயிரிழந்த பரிதாபம்

கோவை மாவட்டம் கந்தே கவுண்டன்சாவடி அடுத்த புதுப்பதி கிராமத்தை சேர்ந்தவர் 75 வயதான முதியவர் நடராஜ். இன்று காலை வழக்கம் போல் அருகில் உள்ள ஓடை பகுதிக்கு காலைக்கடனை கழிப்பதற்கு சென்ற நிலையில் அவ்வழியாக வந்த ஒற்றைக் காட்டு யானை அவரை தாக்கியுள்ளது. அதில் அவர் படுகாயம் அடைந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர் மேலும் வனத்துறையினருக்கும் தகவல் அளித்தனர். பின்னர் அங்கு வந்த வனப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் ஆனால் துரதிஷ்டவசமாக மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.


அதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோத னைக்காக கோவை அரசு மருத்துவமனை பிரேத பரிசோ தனை அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி யுள்ள நிலையில் அடிக்கடி வனவிலங்குகள் நடமாட்டம், குறிப்பாக காட்டு யானைகள் நடமாட்டம் அங்கு அதிகமாக இருப்பதால் வனத்துறை கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img