fbpx
Homeபிற செய்திகள்தென்காசி தொகுதியில் 7,470 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி

தென்காசி தொகுதியில் 7,470 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி

2024நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தென்காசி மாவட்டத் திற்குட்பட்ட சட்டமன்றத் தொகுதி களில் தேர்தல் பணிபுரியும் வகைக்கு 7470 வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள்- சங்கரன்கோவில் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியிலும், வாசுதேவநல்லூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு புளியங்குடி வீராச்சாமி செட்டியார் பொறி யியல் கல்லூரியிலும், -கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு கொடிக் குறிச்சி ஸ்ரீராம்நல்ல மணியாதவா கல்வியியல் கல்லூரியிலும், தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு தென்காசி எம்.கே.வி.கேமெட்ரிகுலேசன் மேல் நிலைப்பள்ளியிலும், -ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு ஆலங்குளம் சர்தார் ராஜாபொறியியல் கல்லூரி யிலும் நடைபெற்றுவருகிறது.

கடந்த 24ம் தேதி காலை 10 மணிக்கு1820 தலைமை வாக்குப் பதிவு அலுவலர்களுக்கும் 1820 முதல்வாக்குப்பதிவு அலுவலர்களுக் கும் பயிற்சிவகுப்புகள் நடைபெற்றன. பிற்பகல் 2 மணிமுதல் 5 மணிவரை அதே பயிற்சிமையங்களில் 1820 இரண்டாம் வாக்குப்பதிவு அலுவலர் களுக்கும் 1820 மூன்றாம்வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் 190 நான்காம் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

மேற்கண்ட அனைத்து பயிற்சி மையங்களிலும், எவருக்கேனும் மருத்துவ உதவிதேவைப்படின் அவர்களுக்கு சிகிச்சை அளித்திடும் பொருட்டு மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். அனைத்து பயிற்சிமையங்களிலும் நடந்த பயிற்சியை தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.

படிக்க வேண்டும்

spot_img