பாங்க் ஆப் மகாராஷ்டிரா நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியாகும். நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்காக பாங்க் ஆப் மகாராஷ்டிராவால் ‘எதிர்கால வங்கியியல்’ குறித்த அகில இந்திய ஹிந்தி கருத்தரங்கம் டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த கருத்தரங்கில் பிரதம விருந்தி னராக இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அலுவல் மொழித் துறை செயலாளர் அன்ஷுலி ஆர்யா கலந்து கொண்டார். பாங்க் ஆப் மகாராஷ்டிரா செயல் இயக்குநர் ஸ்ரீ ஆஷிஷ் பாண்டே தலைமை தாங்கினார். பொதுமேலாளர் சித்ரா தாதார், ஸ்ரீ கே. ராஜேஷ் குமார் (ஹெச்ஆர்எம்), பொதுமேலாளர் ராஜ்பாஷா, டெல்லி மண்டலத்தின் மண்டல மேலாளர் ஸ்ரீ ஹரி ஷங்கர் வத்ஸ் மற்றும் வங்கியின் துணைப் பொது மேலாளர் (ராஜ்பாஷா) டாக்டர் ராஜேந்திர ஸ்ரீவாஸ்தவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை இயக்குநர் ஸ்ரீ ஜக்ஜீத் குமார், துணை இயக்குனர் ஸ்ரீ தரம்பிர், கலந்துகொண்டனர். கருத்தரங்கில் அனைத்து வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பிரதம விருந்தினர் ஐஏஎஸ் அதி காரி அன்ஷுலி ஆர்யா பேசுகையில், வங்கிகளும் நிதி நிறுவனங்களும் நாட்டின் பொருளாதாரத்தின் முது கெலும்பு. அரசின் திட்டங்களை தங்கள் சேவைகள் மூலமாக வங்கி கள் செயல்படுத்தி வருகின்றன.
தற்போதைய சூழ்நிலையில் வங்கியில் இந்தி மற்றும் பிராந்திய மொழிகளின் பயன்பாடு மிகவும் முக்கியமானது. தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையா ளர்களும் இதன் மூலம் பயனடை வார்கள். இந்த திசையில் பாங்க் ஆப் மகாராஷ்டிரா மற்றும் பிற நிறுவ னங்கள் எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டத்தக்கது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக ஹெச்ஆர்எம் மற்றும் ராஜ்பாஷா பொது மேலா ளர் கே.ராஜேஷ் குமார் அனை வரையும் வரவேற்றார். கருத்தரங்கில் “எதிர்கால வங்கியியல்” குறித்த அமர்வுகள் மற்றும் குழு விவா தம் நடத்தப்பட்டது. வங்கியின் இன்ஹ வுஸ் இதழான “மஹாபாங்க் பிரகதி” மற்றும் அதன் பிரெய்லி பதிப்பையும் விழாவில் பங்கேற்ற விருந்தினர்களும் வங்கி அதிகாரிகளும் வெளியிட்டனர்.
இந்த விழாவில் வங்கியின் பல்வேறு ஹிந்தி மொபைல் ஆப்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. மகாராஷ்டிரா வங்கி நடத்திய அகில இந்திய ஹிந்தி கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. செயல் இயக்குனர் ஸ்ரீ ஆஷீஷ் பாண்டே தனது உரையில் தெரிவித்ததாவது:
வரவிருக்கும் நாட்களில் வங்கியின் எதிர்காலத்தை கற்பனை செய்வது மிகவும் சுவாரஸ்யமானது. பாரம்பரிய வங்கிச் சேவையிலிருந்து இணைய வங்கிச் சேவை, மொபைல் பேங்கிங் மற்றும் உரையாடல் சார்ந்த வங்கிச் சேவைக்கு நாங்கள் வெகுதூரம் வந்துவிட்டோம். கிமி, கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் மெட்டாவேர்ஸ் போன்ற சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவ தன் மூலம் வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் சந்தை மற்றும் புதிய தலைமுறை வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தங்கள் தயாரிப்புகளை மாற்றியமைக்க முடியும். இந்தி மற்றும் பிராந்திய மொழிகள் நமது யோசனைகளையும் திட்டங்களையும் தொலைதூரப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல சக்தி வாய்ந்த வழிகள். இவ்வாறு அவர் கூறினார். இறுதியில் டெல்லி மண்டல மேலாளர் ஹரி ஷங்கர் வத்ஸ் நன்றி கூறினார்.