Homeபிற செய்திகள்கோவையில் போக்குவரத்து விதிமீறல்: ரூ.25 கோடி அபராதம் நிலுவையை வசூலிக்கப் போகும் பெட்ரோல் பங்க், இன்சூரன்ஸ்...

கோவையில் போக்குவரத்து விதிமீறல்: ரூ.25 கோடி அபராதம் நிலுவையை வசூலிக்கப் போகும் பெட்ரோல் பங்க், இன்சூரன்ஸ் நிறுவனம்

கோவை மாநகரில் கடந்த 2019 முதல் 2026ம் ஆண்டு வரை போக்குவரத்து விதிமீறல் அபராதம் ரூ.25 கோடி நிலுவையில் உள்ளது. அதனை பெட்ரோல் பங்க், இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர போலீசார், மாநகரில் பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கை, சாலை வசதி மற்றும் வாகனப் போக்குவரத்து ஆகியவற்றின் அடிப்படையில் சீரான போக்குவரத்திற்காகவும், பொதுமக்களின் எளிதான பயணத்திற்காகவும் பல்வேறு போக்குவரத்துச் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் கோவை மாநகரில் அனைத்து முக்கிய சாலைகளிலும், போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படும் இடங்கள் மற்றும் அதற்கான காரணங்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், வாகன பெருக்கத்தை கணக்கெடுத்து பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் எளிதாகவும், காலதாமதமின்றியும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு விரைந்தும் செல்வதற்கு வசதியாக முக்கியச் சாலைகளில் பல இடங்களில் போக்குவரத்து சிக்னல்களை நீக்கியுள்ளனர். அதற்குப் பதிலாக “யு டேன்” வளைவுகள் மற்றும் ரவுண்டானாக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சிக்னல்களில் வெயிலில் நிற்காமலும், தொடர்ந்து செல்லவும் பயனுள்ளதாக ரவுண்டானா, “யு டேன்” அமைந்திருப்பதால் மக்களிடையே இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து அடுத்தப்படியாக போக்கு வரத்து போலீசார் போக்கு வரத்து விதிமீறல் களையும் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி அதிவேகம், ஹெல்மேட், சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை இயக்குவது, மதுபோதை, ஒரே பைக்கில் 3 பேர் பயணிப்பது, இன்சூரன்ஸ் புதுப்பிக்காமல் இருப்பது, அதிகபாரம் என பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களை கண் காணித்து வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். இவ்வாறு கடந்த 2019ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை ரூ. 25 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் 5% மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை மாநகரில் போக்குவரத்து விதிமீறல் களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அதிவேகம், ஹெல்மேட், சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை இயக்குவது, மதுபோதை, ஒரே பைக்கில் 3 பேர் பயணிப்பது, இன்சூரன்ஸ் புதுப்பிக்காமல் இருப்பது, அதிகபாரம் ஏற்றி வருவது என பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களை வாகன தணிக்கையின் போது கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து வருகிறோம்.
இவ்வாறு தினமும் சுமார் 2000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 8 லட்சம் வரை அபராதம் விதித்து வருகிறோம். இதில் ரூ. 4 லட்சம் வரை அபராதம் வசூல் செய்யப்படுகிறது. சில நேரங்களில் விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் பணம் இல்லாத காரணத்தால் அபராத ரசீது அவர்களிடம் கொடுக்கப்படும். அதனை அவர்கள், இ-சேவை மையங்கள், வேறு எங்காவது வாகன தனிக்கையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசாரிடம் அந்த ரசீதை கொடுத்து அபராதம் செலுத்தலாம்.

சிலர் அபராதம் விதிக்கப்பட்டதை கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர். அவர்கள் அடுத்த முறை தணிக்கையில் சிக்கும் போது முந்தைய அபராதம் வசூலிக்கப்படும். அதேபோல அதிகமான அபராத சலான் கொண் டவர்களின் விவரம் சேகரிக் கப்பட்டும் அவர்களிடம் இருந்து அபராதம் வசூலுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கடந்த 2019ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை நிலுவையில் ரூ. 25 கோடி அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் 5% அபராதம் வசூலிக்கப் பட்டுள்ளது. மீதம் உள்ள அபராத தொகையை பெட்ரோல் பங்க் மற்றும் வாகன இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூலம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க்கிற்கு வரும் வாகன ஓட்டிகள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் போது அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதம் அவர்களது பணம் செலுத்தும் இயந்திரத்தில் காண்பிக்கும் நடை முறையை கொண்டு வர ஆர்டிஓ நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல வாகன இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஆண்டு தோறும் இன்சூரன்ஸ் புதுப்பிக்க வரும் வாகன ஓட்டிகளின் அபராதம் காட்டும். அப்போது பெட்ரோல் பங்க் ஊழியர் களும், இன்சூரன்ஸ் நிறுவனத்தினரும் அபரா தம் செலுத்தினால் தான் இன்சூரன்ஸ், பெட் ரோல் தரப்படும் என கூறும்போது அபராத தொகை நிலுவை குறையும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img