கோவை கதிர் கல்வி நிறுவனங்கள் சார்பாக அகில இந்திய ஐவர் கால்பந்து போட்டி நேற்று கதிர் புல் தரை மைதானத்தில் துவங்ககியது. இப்போட்டியில் ஒடிசா, கர்நாடகா, கேரளா போன்ற பல்வேறு மாநில கால்பந்து அணிகள் கலந்து கொண்டன.
இந்த இரண்டு நாள் போட்டியை கதிர் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் கே.எஸ்.மிதிலேஷ் தொடங்கி வைத்தார். மேலும் இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முறையே முதல் பரிசு ஆக ரூ.1 லட்சம் காசோலை மற்றும் சுழல் கோப்பை இரண்டாம் பரிசு ரூபாய் 50 ஆயிரம், சுழல் கோப்பை மூன்றாம் பரிசாக ரூபாய் 20 ஆயிரம் சுழல் கோப்பை நான்காம் பரிசாக ரூபாய் 10 ஆயிரம் சுழல் கோப்பை. மேலும் இப்போட்டியில் சிறப்பு பரிசாக சிறந்த கோல் கீப்பர் சிறந்த வீரர் அனைத்து போட்டிகளிலும் அதிக கோல் போடும் வீரருக்கு சிறப்பு பரிசு அளிக்கப்படுகிறது.



